கை நகத்துக்குள்ள தான் பிரச்சனை இருக்கு, ஆரம்ப புள்ளியே இங்க இருக்கு - உஷார்..!
நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கைகளிலும், நகங்கள் வழியாகவும் அடைக்கலமாகி, வாய்வழியாக உடலுக்கு செல்கின்றன.
இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, உங்கள் கைகளை தவறாமல் கழுவுவதன் மூலமும், சரியாக நகங்களை பராமரிப்பதன் மூலம் தொற்றுநோய்களிலிருந்து உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யலாம். அதனால் எப்படி நகங்களை பராமரிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
நகங்களை சின்னதாக வைக்கவும் - உங்கள் நகங்களை குறுகியதாக வைத்துக்கொள்ளுங்கள். அவை சுத்தம் செய்ய எளிதானவை. அத்துடன் இவை கிருமிகள் அடைக்கலமாகும் அபாயத்தைக் குறைக்கின்றன.
கைகளை பாதுகாக்கும் மாய்ஷரைசரை வைத்துக் கொள்ளுங்கள். இது பாக்டீரியாவிடம் இருந்து பாதுகாக்கும். ஷியா வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெய்களையும் கைகளில் அப்ளை செய்து கொள்ளலாம். பாக்டீரியாக்கள் தங்காது.
நகங்கள் மூலம் உருவாகும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க, அடிக்கடி சரியாக நகங்களை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை சுத்தமாகவும் பராமரியுங்கள்.
ரசாயனங்கள் மற்றும் கழிவு பொருட்களை கையாளும்போது கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். இது தோல் மற்றும் நகங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
கைகள் மற்றும் நகங்கள் உட்பட ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்திற்கு உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வது என்பது நச்சுகளை வெளியேற்றுவதை உடலுக்குள் இயற்கையான திறனை ஆதரிக்கிறது.
நகத்தையும், கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். நகம் தானே என அசலாட்டாக இருந்துவிடாதீர்கள்.