ஒரு வாரத்தில் சருமம் பளபளக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்
கடலை மாவு மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், இவை சருமத்தில் இருக்கும் அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்யலாம்.
பப்பாளி சருமத்திற்கு ஏற்ற பேக் ஆகும். இது முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும். மேலும் முகம் பொலிவாகவும் இளமையாகவும் இருக்க உதவும்.
காபி பொடியை முகத்தில் தடவி வந்தால் கருமை நீங்கும். எனவே முகத்திற்கு ஸ்கரப்பாக காபி தூளை பயன்படுத்தலாம். காபி பொடியில் சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.
தேங்காய் எண்ணெயை சருமத்தை பொலிவாக்க உதவும். சருமம் பளபளப்பாக இருக்க தினமும் ரோஸ் வாட்டர் மற்றும் தேங்காய் எண்ணெயை சருமத்தை தடவி சுத்தம் செய்து வந்தால் போதும்.
கற்றாழை முகத்தை பளபளப்பாக உதவும். மேலும் இது சருமத்தை இளமையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.