மனக்குழப்பம், பதட்டம் அதிகமாக இருக்கிறதா? இந்த ஒரு விஷயத்தை செய்யவும்
வாழ்க்கை முறை மோசமாக கடைபிடிக்கும்போது உங்களுக்குள் ஒரு தெளிவின்மை ஏற்படும். இதனால் பதட்டமாக இருப்பதுடன் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பீர்கள்.
அதற்கு முதலில் மோசமான வாழ்க்கை முறை என்ன? என்பது குறித்து தெரிந்து இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. ஒரு வரைமுறை இல்லாமல் சாப்பிடுவது. காலை முதல் இரவுக்குள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருப்பதெல்லாம் மோசமான வாழ்க்கை முறை தான்.
உணவில் கூட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுகாதாரமில்லாத உணவுகள் சாப்பிடுவது. கீரை, பழங்கள் எல்லாம் எப்போதாவது சாப்பிடுவது. பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவை ஆகும்.
இவையெல்லாம் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் மனதளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எப்போதும் உணவில் கட்டுபாடு இருந்துவிட்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் மனதளவிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உணவில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்போது வயிறு உப்புசம் ஏற்படும். செரிமான பிரச்சனைகள் உண்டாகும். மலச்சிக்கல் எழும். இவையெல்லாம் நேரடியாக நரம்புகள் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி மன இறுக்கத்தை ஏற்படுத்தும்.
அதனால் உங்களுக்கு நாட்பட்ட மனக்குழப்பம், மன இறுக்கம் எல்லாம் ஏற்படும். உணவே உங்களுக்கு இப்படியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் எளிதில் உணர முடியாது. அதனால், இப்படியான பிரச்சனை இருப்பதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உணவு முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள்.
முதலில் சில நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கவும். அப்போது வயிறு உப்புசம், செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் எல்லாம் முதலில் குணமாகும். இவை குணமானவுடன் மனதும் உடல் செயல்பாடு மாற்றம் தெரியத் தொடங்கும். இதனை உங்களால் நன்றாகவே உணர முடியும்.
இந்த மாற்றத்தை உணரும் நேரத்தில் இருந்து பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள தொடங்குங்கள், சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மனக்குழப்பம், பதட்டம் எல்லாம் இருக்காது.