வெயிட் லாஸ் முதல் டீ டாக்ஸ் வரை... அற்புத நலன்களை தரும் நெல்லிக்காய் சட்னி ரெஸிபி
ஆயுர்வேத மருத்துவத்தில், நெல்லிக்காய் அமுதத்திற்கு இணையானதாக கருதப்படுகிறது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிகாயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் மிகுந்திருப்பதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின்பி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
நெல்லிக்காய் சட்னி செய்ய முதலில் 2-3 நெல்லிக்காயை சிறிது பச்சை கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைக்கலாம். வேண்டுமென்றால் ஆம்லா சட்னியில் வறுத்த எள் சிறிதளவு கலக்கலாம். இந்த சட்னியை தினமும் சாப்பிட்டு வர அளப்பரிய பலன்கள் கிடைக்கும்.
டீடாக்ஸ்: நெல்லிக்காய் சட்னியை தினமும் எதோ ஒரு வகையில், சேர்த்துக் கொள்வதால், உடலில் உள்ள நச்சுக்களை நீங்கி புத்துணர்ச்சியாக உணரலாம். ஆற்றலும் குறையாமல் இருக்கும்.
மூட்டு வலி: நெல்லிக்காயை தினமு சாப்பிட்டு வதால், மூட்டு வலி, வீக்கம், யூரிக் அமிலம் பிரச்சனை, கீல் வாதம் போன்ற எலும்பு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து சில நாட்களில் நிவாரணம் கிடைக்கும்.
உடல் பருமன்: நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்து வருவதால், உடல் பருமனை வேகமாக குறைக்கலாம். நெல்லிக்காய், நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். மேலும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும்.
கல்லீரல் ஆரோக்கியம்: உங்களுக்கு கல்லீரலில், கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட ஏதேனும் பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் சேர்த்த உணவை தினமும் சாப்பிடுங்கள். இது உங்கள் கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நிவாரணம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.