செய்வினை, பில்லி, சூனியம், கண்திருஷ்டி நீக்கும் எளிய பரிகாரம்
கோவில் குளத்தின் கரையில் நின்று, ஒரு எலுமிச்சை பழத்தை கைகளுக்குள் வைத்து, உங்களின் தீவினைகள் நீங்க உங்கள் குலதெய்வத்தை வேண்டி, அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி அந்த நீர் நிலையில் விட்டெறிந்து, அந்த குளம் அல்லது கடலில் மூழ்கி நீராடி பின்பு உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்க செய்வினை பாதிப்புகள் நீங்கும்.
துஷ்ட சக்திகளை ஒழிப்பதில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் “பிரத்யங்கரா தேவி”. இந்த தேவி கோவிலில் செவ்வாய் அல்லது வியாழனன்று, பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, திரி போட்டு விளக்கேற்றினால் உங்களுக்கு செய்யப்பட்ட செய்வினை மாந்திரீக கட்டு உடையும்.
பேய், தீய ஆவிகளின் பாதிப்பு, மாந்திரீக பாதிப்புகள் கொண்டவர்கள் ஏதேனும் பழைய நரசிம்மர் கோவிலுக் சென்று, வியாழக்கிழமையன்று அதிகாலை அக்கோவில்களில் இருக்கும் நரசிம்மரை வழிபட்டு, நரசிம்மர் சந்நிதியின் தீர்த்த நீரை முகத்தில் தெளித்து கொண்டு, அக்கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அமர்ந்து நரசிம்மரை தியானித்து உங்களின் செய்வினை பாதிப்புகள் நீங்க வேண்டும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படும் கெடுதல்களை நீக்கி அருள் புரிவார் நரசிம்மர்.
சந்திரனின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள் வாரத்தில் ஒருமுறையோ அல்லது மாதத்தில் ஒரு முறையாவது திங்கட்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வர செய்வினை ஏதேனும் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அவை நீங்கும்.
செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.