EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்!!!

Wed, 22 May 2024-7:14 am,

ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ​​ஈ-நாமினேஷனை பூர்த்தி செய்து வருங்கால வைப்பு நிதி (பிராவொடெண்ட் ஃபண்ட்), ஓய்வூதியம் (இபிஎஸ்-ஓய்வூதியம்) மற்றும் EDLI இன்சூரன்ஸ் திட்டத்தில் தங்களுடைய வாரிசுதாரரை, இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நியமிக்கலாம்.  

ஓய்வூதியம் மற்றும் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகள் தங்கள் குடும்பத்தினரின் பணத்தை பெற நாமினேஷன் அவசியம் ஆகும். வீட்டில் இருந்தபடியே ஈ-நாமினேஷனை தாக்கல் செய்யவதற்கு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வசதி செய்யப்பட்டுள்ளது

ஈ-நாமினேஷன் தாக்கல் செய்ய எளிய வழிகள்

www.unifiedportal-mem-epfindia.gov.in என்ற உறுப்பினர் இ-சேவா போர்டலுக்குச் சென்று, UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்

'மேனேஜ் செக்ஷன்' என்ற பகுதிக்குச் சென்று 'ஈ-நாமினேஷன்' என்ற தெரிவை கிளிக் செய்யவும்

நாமினி பெயர் மற்றும் தகவல்களை உள்ளிட்ட பிறகு  அடுத்த பக்கத்தில், E-Sign ஐ கிளிக் செய்து, ஆதார் மூலம் OTP ஐ உருவாக்கவும்.

நியமன விவரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை நாமினியாக நியமிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நாமினியாக நியமித்தால், ஒவ்வொருக்குமான சதவிகிதத்தையும் குறிப்பிடவும். 

டிஜிட்டல் கையொப்பம்/இ-கையொப்பம் ஆதார் அடிப்படையிலான மின் கையொப்பத்தைப் பயன்படுத்தி நியமனத்தை அங்கீகரிக்கவும்.  

தற்போது ஓடிபி எண் உள்ளிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைலுக்கு OTP வரும்

மின் கையொப்பம் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் இ-நாமினேஷன் வெற்றிகரமாக EPFO இல் பதிவு செய்யப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link