தொடரும் இந்தியாவின் இன்-ஸ்விங் பலவீனம்... இப்படியே போனா உலகக் கோப்பை அவ்வளவு தான்!

Sat, 02 Sep 2023-6:21 pm,

இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித், கில் ஆகியோர் 4.2 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த போது, மழை குறுக்கிட்டது. 

மழை நின்ற பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், மழை நின்று ஆட்டம் தொடங்கிய அதே 5ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரோஹித், ஷாகின் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

 

கடந்த சில ஆண்டுகளாக, இடது கை பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்த நிலை இன்றும் தொடர்ந்தது. அடுத்தடுத்து மூன்று பந்துகளை அவுட்-சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு போட்ட அஃப்ரிடி, கடைசி பந்தை ஸ்டம்ப் லைனில் இன்-ஸ்விங் செய்ய ரோஹித் லைனை கணிக்க தவறிவிட்டார். இதனால், போல்டாகி 11 ரன்களில் நடையைக்கட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக நொறுக்கினார். 

7ஆவது ஓவரில் இந்தியாவின் மற்றொரு விக்கெட்டையும் அஃப்ரிடி எடுத்தார. விராட் கோலி, நான்காவது ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை ஷாட் ஆட முயற்சித்து, இன்சைட் எட்ஜாகி போல்டானார். மேலும், ஷாகின் ஷா அஃப்ரிடி விராட் கோலியின் விக்கெட்டை மீண்டும் வீழ்த்தினார். 

ஷ்ரேயஸ் ஷார்ட் பால் தடுமாற்றம், கில்லின் அனுபவமின்மை ஆகியவை இந்த போட்டியிலும் தொடர்ந்தது. அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடங்கும் சூழலில் இந்தியாவின் டாப் ஆர்டர் இப்படி பலவீனமாக காணப்படுவது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

 

இன்னும் 3 நாள்களில் உலகக் கோப்பை ஸ்குவாடை பிசிசிஐ அறிவிக்க வேண்டும். எனவே, ரோஹித் - டிராவிட் ஜோடி என்னென்ன வியூகங்களை வகுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு தடுமாறி வந்த இந்திய பேட்டர்கள், தற்போது மிடில் ஓவர்களில் சற்று நிதானமாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். இஷான் கிஷன் அரைசதம் கடந்து அசத்தினார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link