Hurricane Ida: நியூயார்க் சாலைகளில் வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்..!!

Fri, 03 Sep 2021-11:54 am,

கனமழை காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் கூறினார். சாலைகள் குளங்களாக மாறிவிட்டன, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தேசிய வானிலை சேவை நியூயார்க் நகரில் முதல் முறையாக வெள்ளப்பெருக்குக்கான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மறுபுறம், நியூ ஜெர்சி கவர்னர் பில் மர்பி அவசரகால நிலையை அறிவித்தார், பல பகுதிகள் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளதாகக் கூறினார். புதன்கிழமை இரவு, மின்சாரம் செயலிழந்ததாக 81740 புகார்கள் பெறப்பட்டன. (புகைப்பட ஆதாரம்: ஸ்கை நியூஸ்)

நியூ ஜெர்சியிலுள்ள க்ளூசெஸ்டர் கவுண்டியும் மழை மற்றும் வெள்ளத்தின் மத்தியில் ஒரு சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பெசெக் மேயர் ஹெக்டர் லோரா கூறுகையில், வெள்ளத்தில் ஒரு கார் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். அதே நேரத்தில், குடியிருப்பின் அடித்தளத்தில் இருந்து ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பென்சில்வேனியாவில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.மெட்ரோ ரயில் நிலையத்தில் நீர்வீழ்ச்சிகள் பாய்கின்றன  என 'WPVI' என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. (புகைப்பட ஆதாரம்: ட்விட்டர்)

நிலைமை மோசமடைந்து வருவதால், நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும், அவசர கால வாகனங்களைத் தவிர, வேறு எந்த வாகனமும் சாலையில் அனுமதிக்கப்படவில்லை. (புகைப்படம்: வளைகுடா செய்தி)

மோசமான வானிலை காரணமாக மறு உத்தரவு வரும் வரை நியூ ஜெர்சியில் போக்குவரத்து ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நெவார்க் லிபர்ட்டி விமான நிலையத்தில்  வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் அனைத்து பயணிகள் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், நியூயார்க்கிலும், சுரங்கப்பாதை சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. (புகைப்பட ஆதாரம்: ட்விட்டர்)

172 மைல் வேகத்தில் வீசிய இடா சூறாவளி காரணமாக, லூசியானாவில் பெரும்பாலான சாலைகள் குளங்களாக மாறிவிட்டன. மரங்கள் சாலையின் குறிக்கே விழுந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. (புகைப்பட ஆதாரம்: ராய்ட்டர்ஸ்)

நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் மன்ஹாட்டனில் உள்ள முக்கிய சாலைகளை வெள்ளம் மூடியது. கார்கள் படகுகள் போல் மிதக்கின்றன. (புகைப்பட ஆதாரம்: ராய்ட்டர்ஸ்)

சூறாவளி காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், மக்கள் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். (புகைப்பட ஆதாரம்: பிரான்ஸ் 24)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link