திருமண உறவில் புரிதலை அதிகமாக்க... தம்பதிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?
இந்த நவீன காலகட்டத்தில் திருமணங்கள் அதிக ஆடம்பர கொண்டாடங்களுடன் நடைபெறும் அதே வேளையில்தான், மிக விரைவாகவே மணமுறிவு ஏற்பட்டு விவாகரத்துகளும் அதிகம் நடக்கின்றன.
திருமண உறவை ஆரோக்கியமான ஒன்றாக கொண்டுச்செல்லும்பட்சத்தில் நிச்சயம் பிரச்னைகள் எழுந்தாலும் அவை விவாகரத்து வரை செல்லாது. ஆரோக்கியமான உறவுக்கு தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதல் மிக மிக அவசியம்.
அந்த வகையில், புரிதல் அதிகமாகி உறவு வலுபெற வேண்டுமென்றால் இந்த நான்கு விஷயங்களை தம்பதிகள் செய்ய வேண்டும். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
முதலாவதாக உங்கள் பார்ட்னரின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும் மரியாதை அளித்து அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர் சொல்லும் விஷயங்கள் உங்களுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் இருந்தாலும் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலித்து உரிய முறையில் பதிலளிப்பது உங்களுக்கு இடையிலான புரிதலை அதிகமாக்கும்.
அதேபோல் இருவருக்கும் பரஸ்பரம் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். கிரிக்கெட் பார்ப்பது, வெப்-சீரிஸ் பார்ப்பது, வெளியில் சென்று கேம்ஸ் விளையாடுவது போன்று உங்கள் இரண்டு பேருக்கும் பரஸ்பரம் பிடித்த விஷயங்களை செய்யுங்க. இதில் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்களுக்குள் புரிதல் மேம்படும்.
அதேபோல் உங்களின் பார்ட்னரை மனதார நம்புங்கள். நம்பிக்கைதான் ஆரோக்கியமான உறவுக்கான அளவுகோள். நீங்கள் செய்யும் சில விஷயங்கள் உங்கள் பார்ட்னருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவற்றை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கும். வெளிப்படையாக அதிக நம்பிக்கையுடன் இருக்கும்போது உங்களுக்குள் புரிதல் அதிகமாகும்.
பிரச்னை என வந்தால் அதனை நிதானமாக அமர்ந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். பிரச்னைகளை பேசி முடித்துக்கொள்வதால் உங்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் உங்கள் பார்ட்னருக்கு புரியும். எனவே புரிதலும் அதிகமாகும்.
பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. திருமண உறவு சார்ந்த சந்தேகங்களுக்கு உரிய வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.