தம்பதிகள் இடையே நெருக்கமே இல்லையா... கணவன், மனைவி படிக்க வேண்டிய 5 டிப்ஸ்

Tue, 17 Sep 2024-4:43 pm,

கணவன் - மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகம் இருந்தால்தான் அந்த உறவில் ஒரு பிடிமானம் இருக்கும். நெருக்கம் இல்லாதபட்சத்தில் நிச்சயம் இவருக்கும் நடுவே கண்ணில்படாத வெறுப்பு மேலோங்கும்.

 

கணவன் - மனைவி இடையே பிரச்னை இல்லையென்றாலும் அவர்கள் நெருக்கமாக இல்லை என்றால் அது பெரிய சிக்கல்தான். கணவன் - மனைவி திருமண உறவில் தூரமாக விலகியிருந்தால் இருவருக்கும் வாழ்வில் சந்தோஷம் இருக்காது. அந்த வகையில், நெருக்கம் அதிகரிக்க தம்பதிகள் செய்ய வேண்டியவை குறித்து இங்கு காணலாம். 

 

நம்பிக்கையாக இருங்கள்: திருமண உறவில் நம்பிக்கையும் பொறுமையும் மிக அவசியமான ஒன்றாகும். உங்களுக்கு இருவருக்கும் நெருக்கம் குறைவாக இருந்தால், ஒரு முடிவெடுப்பதில் அவசரம் காட்டாதீர்கள். சற்று காலம் எடு்தது அதுகுறித்து சிந்தியுங்கள். நம்பிக்கையை இருவரும் வளர்ப்பதன் மூலம் நெருக்க்ததை பெறுவீர்கள்.

 

நேரம் செலவிடுங்கள்:  திருமண உறவில் இருவரும் அதிக நேரம் செலவிடுவது அவசியமாகும். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து திரைப்படங்களுக்குச் செல்வது, கடற்கரை மற்றும் பூங்கா ஆகியவற்றுக்கு செல்வது இருவருக்கும் இடையிலான தூரத்தை குறைக்கும். 

 

நினைவுகளை திரும்பி பாருங்கள்: உங்களின் திருமண உறவின் கடந்த காலங்களின் மகிழ்வான தருணங்களை நினைவுக்கூர்வதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள செயற்கையான தூரம் என்பது குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும். 

 

மனம் திறந்து பேசுங்கள்: திருமண உறவில் மனம் திறந்து பேசுவது என்பது முக்கியமாகும். நீங்கள் எதையும் மறைக்காமல் பேசினால் நிச்சயம் கணவன், மனைவி இடையேயான தூரம் குறையும். நல்ல தகவல் தொடர்பு இருக்கும்பட்சத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.

 

சின்ன சின்ன விஷயங்கள்: பிறந்தநாள்கள், முதல் வருட கொண்டாட்டம், சிறப்பான தருணங்கள் உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களையும் நினைவுக்கூர்வதன் மூலம் உங்களின் நெருக்கம் அதிகரிக்கலாம். நீங்கள் திருமண உறவில் சின்ன சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து செய்வதன் மூலம் பிரச்னைகள் தீரலாம்.  

 

பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களின் அடிப்படையில் வைத்து எழுதப்பட்டவை. எனவே இதை பின்பற்றும் முன் உரிய வல்லுநரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link