படுக்கறையில் மனைவி இப்படி படுத்து தூங்கினால்... இன்பம் இரட்டிப்பாகும் - வாஸ்து டிப்ஸ்

Sun, 20 Oct 2024-2:22 pm,

வீட்டில் கணவன் - மனைவி ஒரு குடும்பமாக, அன்பாக, மிகுந்த அரவணைப்போடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் (Vastu Shastra) விடை இருக்கிறது. 

 

அதாவது, கணவன் மற்றும் மனைவி படுக்கையில் தூங்கும்போது எந்த கோணத்தில், எந்த திசையில் தூங்க வேண்டும் என்பதையும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதனை பின்பற்றினால் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். 

 

வாஸ்து சாஸ்திரம் கூறும் விஷயங்களை கணவன் மனைவி முறையாக பின்பற்றினால் வீட்டில் மட்டுமின்றி அலுவலகம் உள்பட பணியிடத்திலும் ஒருவருக்கு முன்னேற்றம் ஏற்படும், அதிர்ஷ்டம் உண்டாகும். வீட்டிலும் செல்வமும் அதிகம் சேரும், காதலும் அதிகரிக்கும். 

 

அந்த வகையில், வாஸ்து சாஸ்திரத்தின்படி கணவன் - மனைவி தூங்கும் படுக்கை அறை என்பது வீட்டில் தென் திசையில்தான் இருக்க வேண்டும். மேலும், தூங்கும்போது தலை தெற்கு பார்த்து இருக்க வேண்டும். இது உடல் நலனுக்கும், மனநலனுக்கும் முக்கியம் என கூறப்படுகிறது. 

 

அதுமட்டுமின்றி, படுக்கையில் தூங்கும்போது மனைவி, கணவனுக்கு இடதுபுறமாக மட்டுமே தூங்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதுதான் மண உறவில் இன்பத்தை இரட்டிப்பாக்கும் எனவும் நம்பப்படுகிறது. 

 

புராணத்தின்படி, சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுத்தபோது வலது பக்கம் ஆண் உருவத்திலும், இடது பக்கம் பெண் உருவத்திலும் (பார்வதி தேவி) இருந்ததாக நம்பப்படுகிறது. எனவே இந்துமத நம்பிக்கையின்படி எப்போதும் மனைவி, கணவனுக்கு இடதுபுறமாக இருப்பதே சுபமான ஒன்றாக கருதப்படுகிறது. 

 

திருமணத்திற்கு பின்னர் உட்கார்ந்தாலும் சரி, நின்றாலும் சரி, படுக்கையில் தூங்கினாலும் சரி மனைவி என்பவர் கணவனுக்கு இடதுபுறமாகவே இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. 

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வாஸ்து சாஸ்திரம் குறித்த பொதுவான நம்பிக்கை மற்றும் தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link