Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா! ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு!
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. 50 ஓவர் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து என்ன செய்வதென்று ஐசிசி விவாதித்து வருகிறது.
100 நாள் கவுண்ட்டவுனை முன்னிட்டு ஐசிசி சில சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்த நிலையில், இந்தியாவின் இந்த முடிவால் ஐசிசி இதனை ஒத்திவைத்துள்ளது.
"இன்னும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான அட்டவணை உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து பாகிஸ்தான் மற்றும் பங்கேற்கும் நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறோம். விரைவில் அட்டவணை வெளியிடப்படும்" என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல இந்திய அரசு அனுமதி மறுத்ததை பிசிசிஐ, ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் 'ஹைப்ரிட் மாடலை' நடைமுறைப்படுத்தலாமா என்று ஐசிசி யோசித்து வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி சமீபத்தில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யாது என்று பிசிசிஐயிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை என்று கூறினார்.