மைதானத்தை வாடகைக்கு எடுக்கும் ஐசிசி..! டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் ஏற்பாடுகள்

Fri, 19 Jan 2024-1:50 pm,

அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐசிசி தொடங்கியுள்ளது.

 

அமெரிக்காவில் முதன்முறையாக ஐசிசி நடத்தும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. ஆனால் அங்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துமளவுக்கான உட்கட்டமைப்புகள் ஏதும் இல்லை.

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு உகந்த மைதானம் கூட அங்கு இல்லை. இதனால் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு உகந்த தற்காலிக மைதானங்களை அங்கு அமைக்க திட்டமிட்டிருக்கிறது. 

 

அதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து தற்காலிக மைதானங்களை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது. 

 

அதேபோல், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கிரிக்கெட் போட்டிகளை அமர்ந்து ரசிக்க தேவையான நாற்காலிகள் லாஸ்வேகாஸில் இருந்து செல்ல இருக்கிறது. 

 

அடிலெய்டு ஓவல் கியூரேட்டர் டேமியன் ஹூக் தயாரித்த டிராப்-இன் பிட்ச்கள் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. 

 

டிராப் இன் பிட்சுகள் என்பது தற்காலிகமாக உருவாக்கப்பட்டு, அவை மைதானத்தில் பொருத்தப்படும். ஆனால் இந்தியாவில் மைதானங்களிலேயே விளையாடுவதற்கு உகந்த பிட்சுகள் உருவாக்கப்படும். 

 

இதுதவிர ஜூன் 9-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இதற்காக 34,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய தற்காலிக கேலரி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு பிறகு அகற்றப்படும். இதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

 

பயிற்சி ஆடுகளங்களும் டிராப் இன் பிட்சுகள் பார்மேட்டிலேயே தயார் செய்யப்பட இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், 20 ஓவர் உலக கோப்பைகள் அனைத்தும் புதிய பிட்சுகளிலேயே நடைபெறும் என அறிவித்திருக்கும் ஐசிசி, மழை பெய்தால் தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

 

இந்த கட்டுமானங்கள் அனைத்தும் மார்ச் அல்லது ஏப்ரல் மொத தொடக்கத்திற்குள் நிறைவடையும் என்றும் ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link