எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்த ஐசிஐசிஐ வங்கி!
ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது என்பது பிரபலமான மற்றும் வருவாய் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த முதலீடு ஆகும்.
ஐசிஐசிஐ வங்கியானது அதன் ஃபிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளுக்கான புதிய வட்டி விகிதங்கள் மாற்றங்களை ஜூலை-14 முதல் அமல்படுத்தியது.
151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை எஃப்டி விகிதம் 4.75%, 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை எஃப்டி விகிதம் 5.25%, 290 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு குறைவான எஃப்டி விகிதம் 5.35%, 1 வருடம் முதல் 389 நாட்கள் வரை எஃப்டி விகிதம் 5.60% ஆகும்.
ஐசிஐசிஐ வங்கி எஃப்டிகள் மூலம், ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை வரி விலக்கு பெறலாம்.