பிரம்மச்சாரியத்தை ஒரு மாதம் கடைபிடித்தால்... கிடைக்கும் நன்மைகளை பாருங்க!
பிரம்மச்சாரி (Celibacy) என்றால் திருமணம் செய்யாதவர் என்றில்லை. எவர் ஒருவர் பாலியல் இன்பங்களை துறந்தவராக கருதப்படுகிறாரோ அவர்தான் பிரம்மச்சாரி என கூறப்படுகிறது. (Image Credit: Meta AI)
உடலுறவு மற்றும் சுயஇன்பம் ஆகிய பாலியல் இன்பங்களில் இருந்து தள்ளியிருப்பதே பிரம்மச்சாரியம் என கூறுகின்றனர். ஒரு சிலர் பாலியல் இன்பங்களை தவிர்ப்பதால் மனநலன் சீராக இருப்பதாக நம்புகின்றனர். (Image Credit: Meta AI)
அதாவது, இத்தகைய பாலியல் இன்பங்களால் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் தங்களின் தர்மத்தில் இருந்தும், கர்மத்தில் இருந்தும் பாலியல் இன்பங்கள் தங்களை ஓரங்கட்டுவதாகவும் சிலர் நம்புகின்றனர். (Image Credit: Meta AI)
இந்நிலையில், ஒரு மாதம் முழுவதும் நீங்கள் முறையாக பிரம்மச்சாரியத்தை கடைபிடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். (Image Credit: Meta AI)
இது சிலருக்கு உடல் ரீதியான, ஆன்மீக ரீதியான, மன ரீதியான ஆற்றல்களை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கையை இது வலுப்படுத்தும் என்றும் அதுசார்ந்த நெறிமுறைகளுடன் ஒன்றிப்போக இந்த பிரம்மச்சாரியம் உதவும் என நம்புகின்றனர். (Image Credit: Meta AI)
அதேபோல் வாழ்வில் பெரும் துன்பங்களை கடக்க நினைப்பவர்களுக்கு பிரம்மச்சாரியம் பெரும் உதவியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நெருக்கமானவர்களின் மறைவு, காதலித்தவர்களுடனான உறவு முறிவு ஆகிய துக்கத்திற்குரிய, கவலைக்குரிய விஷயங்களில் இருந்து விடுபட பிரம்மச்சாரியம் உதவக்கூடும் என்கின்றனர். (Image Credit: Meta AI)
உடலுறவு உள்ளிட்ட பாலியல் இன்பங்கள் மேல் நீங்கள் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டால் நிச்சயம் ஆக்கப்பூர்வமான விஷயங்களை நோக்கி நீங்கள் நகர்வீர்கள் என கூறப்படுகிறது. கல்வி, பணி சார்ந்த முன்னேற்றம் உள்ளிட்டவற்றில் நீங்கள் கவனம் செலுத்தலாம், பாலியல் இன்பங்கள் இவற்றில் இருந்து உங்களை திசைத்திருப்பும் என்பதும் முக்கியமான வாதமாக உள்ளது. (Image Credit: Meta AI)
பொறுப்பு துறப்பு: இங்கு குறிப்பிடப்பட்டவை அனைத்தும் பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிசெய்யவில்லை. (Image Credit: Meta AI)