இந்த அட்டை வைத்திருந்தால் ஆண் / பெண் இருவரும் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறலாம்

Tue, 17 Dec 2024-2:32 pm,

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் எதிலும் பயன்பெறாதவர்கள் இந்த அமைப்பு சாரா தொழிலாளர் அட்டை வைத்திருந்தால் பல்வேறு நன்மைகள் பெறலாம். இந்த அட்டையை எப்படி பெறுவது? இதற்கு தகுதி என்ன என்பதை முழுமையாக பார்ப்போம். 

உழைப்பும், உயர்வும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் இந்த அட்டை வைத்திருந்தால் மாதம் மாதம் ரூ. 1000 உதவித்தொகை கிடைக்கும். மேலும் இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு நல உதவிகள் தமிழக அரசாங்கம் வழங்கி வருகின்றன. 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 70 (உடலுழைப்பு) மற்றும் 54 (கட்டுமானம்) இனங்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை, விபத்து ஊனம், ஈமச்சடங்கு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அந்த வரிசையில் மாதம் ரூ.1000 எப்படி பெறுவது என்பதை தெரிந்துக்கொள்ளுவோம். 

அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் பதிவு செய்வதற்கான தகுதி மற்றும் வழிமுறைகள்: 1. பதிவு விண்ணப்பத்தில் தொழிலாளர் செய்யும் வேலை குறித்து பணிச்சான்றினை தொழிற்சங்கம் வழங்கியிருந்தால்,  தொழிற்சங்கப் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய முத்திரை இடம் பெற்றிருக்க வேண்டும், 2. பிறப்பு அல்லது இறப்பு பதிவுச் சான்று, 3. பள்ளி அல்லது கல்லூரிச் சான்று, 4. வாகன ஓட்டுரிமை உரிமை நகல், 5. வாக்காளர் அட்டை சான்று,  6. குடும்ப அடையாள அட்டை, 7. வயது சான்று, 8. தேசியமாயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு.

அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் அடையாள அட்டை வாங்கிய பிறகு ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தொழிலாளர் அடையாள அட்டை பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழில் நலவாழ் நலத்திட்ட உதவி என்னென்ன கிடைக்கப்போகுது பார்த்தால், திருமணத்துக்கு ஆண்களுக்கு ரூ.3000 மற்றும் பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்படும். மகப்பேறு காலத்தில் ரூ.6000 வழங்கப்படும். கருக்கலைப்பு மற்றும் கருச்சிதைவுக்கு ரூ. 3000 வழங்கப்படும். 

10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு படிப்பதற்கு பெண் குழந்தைகளுக்கு 1000 ரூபாயும், 12 ஆம் வகுப்பு படிப்பதற்கு பெண் குழந்தைகளுக்கு ரூ.1500 உதவித்தொகை கிடைக்கும். 

அதேபோல 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்ததால் ரூ.1000 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.1500 உதவித்தொகையும், பட்டப்படிப்பு சேர்பவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகையும் கொடுக்கப்படும். மேலும் விடுதியில் தங்கி படித்தால் அவர்களுக்கு ரூ.1750 உதவித்தொகை வழங்கப்படும். 

அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு 40000 ரூபாயும், அதுவே அவர்கள் விடுதியில் தங்கி  படித்தால் 5000 ரூபாயும் வழங்கப்படும். அதேபோல் தொழில் பட்டப்படிப்பான சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற தொழில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 4000 ரூபாயும், அவர்கள் விடுதியில் தங்கி படித்தால் ரூ.6000 உதவித்தொகை கிடைக்கும். 

அதேபோல தொழில்நுட்ப பட்டமேற்படிப்பு படிக்க ரூ. 6000 மற்றும் அவர்கள் விடுதியில் தங்கி படிக்க 8000 ரூபாயும் வழங்கப்படும். மேலும் ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிக்க 1000 ரூபாயும் மற்றும் அவர்கள் விடுதியில் தங்கி படித்தால் ரூ1200 கிடைக்கும். 

ஒரு மூக்கு கண்ணாடி வாங்கணும்னு நினைத்தால் ரூ500 கிடைக்கும். 60 வயது நிறைவு செய்தவர்களுக்கு மாதம் மாதம் ரூ. 1000 ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 400 மாதம் கிடைக்கும். பணியிடத்தில் விபத்து மரணம் ஏற்பட்டால்  ரூ. 5 லட்சம் மாறும் பணியில் இல்லாத இடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் நேர்ந்தால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். விபத்து காரணமாக ஊனமானவர்களுக்கு 1 லட்சம் ரூபாவும், இயற்கை மரணத்துக்கு ரூ.20,000 ரூபாயும், ஈமச் சடங்குக்கு ரூ.5000 வரைக்கும் உதவித்தொகை வழங்கப்படும்

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய நினைத்தால், விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தொழிலில் ஈடுபட்டு உள்ளோர் என்பதற்கான சான்று, கட்டுமான வாரியத்தின் மூலமாக பதிவு பெற்ற ஒப்பந்ததாரரின் சான்று, கட்டுமானல் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள், கட்டுமான வாரியம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் போன்ற ஏதாவது ஒன்றின் சான்று, கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஆதார் எண், வயது மற்றும் இருப்பிட தொடர்பான ஆவணங்கள் எடுத்துக்கொண்டு உங்க பகுதியில் உள்ள தொழிலாளர் நலவாரியத்தின் மூலமாக நீங்க அப்ளை பண்ண முடியும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link