டீ குடிக்கும் நேரத்தில் சிகிரெட் பிடித்தால் ஆபத்து உங்கள் அருகில்!!
உணவுக்குழாய் புற்றுநோய் (Esophageal Cancer): டீ குடித்துக்கொண்டே புகை பிடிப்பதால் உணவுக்குமாய் புற்றுநோய் ஆபத்து 30% அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என ஆய்வு கூற்று சொல்லப்படுகிறது.
சூடான ஒன்று செல்களை சேதப்படுத்தும் அதனுடன் சேர்த்துப் புகைபிடிப்பதன் காற்று கலந்தால் பலமடங்கு செல்கள் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. மேலும் இது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
தேநீரில் காஃபின் நிறைந்துள்ளதால் வயிற்றில் சிறப்பு அமிலத்தை உற்பத்தி செய்யத் தூண்டுவதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இருந்தாலும் அதிகம் நிறைந்த காஃபின் வயிற்றில் நுழைந்தால் கேடு விளைவிக்கும் அபாயம் ஏற்படும்.
சிகரெட் அல்லது பீடிகளில் நிகோடின் காணப்படுவதால் நீங்கள் வெறும் வயிற்றில் தேநீரும் சிகரெட்டும் ஒரே சமயத்தில் செய்யும்பொழுது உங்களுக்கு தலைச்சுற்றல், தலைவலி போன்ற பிரச்சனைகள் விரைவில் ஏற்படும் வாய்ப்பை இது தூண்டுகிறது.
நாளொன்றுக்கு ஒரு சிகெரெட் பிடித்தாலும் தீங்கு தீங்குதான் பத்து சிகெரெட் பிடித்தாலும் தீங்கு தீங்குதான் என்று 100சதவீதம் கூறுகின்றனர். எந்தவொரு நபர் சிகரெட் பிடிக்கிறார்களோ மூளை பக்கவாதம் அல்லது இதய பக்கவாதம் ஏற்படும் அபாயம் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
சாதாரண மனிதர்களை விட சிகரெட் பிடிப்பவர்களுக்கு 7% மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. செயின் ஸ்மோக்கர்களாக இருப்பவர்களுக்கு அவர்கள் வயதில் 17 ஆண்டுகள் குறைக்கலாம். ஏனெனில் உயிர் வாழும் சதவீதம் அவர்களுக்கு மிகக் குறைவு என்று சொல்லப்படுகிறது.
சிகிரெட் பிடிப்பவராக இருந்து ஒரு வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை என்று சிகிரெட் பழக்கம் வைத்திருப்பவர்களுக்கும் இதுபோன்று ஏற்படலாம். சிகிரெட்டை நீங்கள் 1 வருடம் நிறுத்திப் பாருங்கள் உங்கள் உடல் வலுவான ஆரோக்கியம் பெறுவதை நீங்கள் அறிவீர்கள்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.