`1500 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன், அதனால் சொல்கிறேன்` வெற்றிமாறன் குறித்து இளையராஜா

Thu, 09 Mar 2023-7:24 pm,

விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நேற்றைய நிகழ்வில் பங்கேற்று பாடல், டிரைலர்களை வெளியிட்டார். 

 

"1500 திரைப்படத்தில் பணியாற்றிய நான் கூறுகிறேன். வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்" என நேற்றைய விழாவில் இளையராஜா தெரிவித்தார். 

விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். 

ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. 

 

சூரி இத்திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு நேற்றைய நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால், சற்று கடினமாக இருக்கும் என்பதால் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

படத்தின் பாடல்களும், டிரைலரும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link