ராகுவின் அருளால் 2023-ல் இந்த ராசிகளுக்கு அமோக வாழ்வு: மகிழ்ச்சி பொங்கும்
2023-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் காணலாம். ராகு பெயர்ச்சி 2023 -ல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரம் அதிகப் பண வரவை ஏற்படுத்திக்கொடுக்கும். வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக, ராகுவின் பெயர்ச்சி காலம் உங்கள் நிதி நிலையை தொடர்ந்து பலப்படுத்தும். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் இருவரும் ஆதாயம் அடைவார்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்திலும், படிப்பிலும், குடும்பத்திலும் அனுகூலமான சூழல் இருக்கும்.
ராகுவின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றத்தைத் தரும். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தடைபட்ட வேலைகள் முடிவடையும்.
ராகு சஞ்சாரத்திற்குப் பிறகு மீனத்தில் நுழைகிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நற்பலன்களை அள்ளித் தரும். மீன ராசிக்காரர்களுக்கு ராகு அதிக செல்வத்தைக் கொடுப்பார். அவர்களது வருமானம் அதிகரிக்கும். அதே போல் எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் பெரிய சாதனைகளை அடைவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். கணவன் / மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)