இஞ்சி இருக்கு, பயம் எதுக்கு? சளி, இருமல், உடல் பருமன், மலச்சிக்கல்... அனைத்துக்கும் குட் பை
நாம் நமது சமையலில் இஞ்சியை பயன்படுத்தினால் சுவை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் கிடைக்கும் ஆரோகிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குளிர்காலத்தில் இஞ்சியை உட்கொள்வதால் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு, இஞ்சி டீ மற்றும் இஞ்சி டிகாக்ஷன் குடிப்பது நன்மை பயக்கும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரையும் குடிக்கலாம்.
நறுக்கிய இஞ்சியை எலுமிச்சை சாறுடன் கலந்து குடிப்பதால் நீரிழிவு நோய் குணமாகும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இஞ்சி உதவும்.
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிப்பது அதிக பலன்களை அளிக்கும்.
இஞ்சியை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனால் நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் அதிகரிக்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இஞ்சியில் உள்ளன.
மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி முக்கிய தீர்வாக பார்க்கப்படுகின்றது. இந்த சிக்கல்கள் இருக்கும்போது இஞ்சியை உட்கொண்டால் உடனடி தீர்வு காணலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் ரசம், தேநீர் ஆகியவற்றில் இஞ்சியை சேர்த்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை