குருவின் மாற்றத்தால் உருவாகும் மகாபுருஷ யோகம்: இவர்களுக்கு பொற்காலம்
![ஹன்ஸ் பஞ்ச மகாபுருஷ யோகம் என்றால் என்ன? What is Hans Mahapurush Rajayogam](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/22/258821-guru1.jpg?im=FitAndFill=(500,286))
தனுசு, மீனம், கடகம் ஆகிய ராசிகளில் ஏதேனும் ஒன்றில் வியாழன் கிரகம் அமைந்து கேந்திரத்தில் அமரும் போது இந்த யோகம் உருவாகும். இந்த யோகத்தின் தாக்கம் உள்ள நபருக்கு அரசனுக்கு இணிஅயான வாழ்க்கை கிடைக்கும். இந்த யோகம் கொண்டவர்களுக்கு அழகு, அறிவாற்றல், மகிழ்ச்சி, திறமை, நல்லொழுக்கம் ஆகிய பண்புகள் தானாக அமிந்திருக்கும். வாழ்க்கையில் அதிகப்படியான வெற்றி கிடைக்கும்.
![ரிஷபம் Taurus](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/22/258820-guru2.jpg?im=FitAndFill=(500,286))
வியாழன் மீன ராசியில் சஞ்சரிப்பதால், இந்த நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த யோகத்தினால் ரிஷப ராசிக்காரர்கள் புதிய பணிகளை தொடங்குவார்கள். இந்த நேரத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
![கடகம் Cancer](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/22/258819-guru3.jpg?im=FitAndFill=(500,286))
குருவின் மாற்றம் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப் போகிறது. இவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். எடுத்த அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். குடும்பத்துடனான உறவு இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் குருவின் மாற்றத்தால் பணம் ஈட்டுவதற்கான பல வாய்ப்புகள் உருவாகும். பண வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். மேலும், அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)