ஓய்வூதியதாரர்களுக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன், இரட்டை பென்ஷன் குறித்து முக்கிய தகவல்

Mon, 27 Jan 2025-8:01 pm,

பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டாளர் துறை அலுவலகத்தில், பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு "குறை தீர்ப்பு முகாம்" நடைபெற்றது. அதில் பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கலந்துக்கொண்ட ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் குறித்து சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன், 2012 ஆம் ஆண்டு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு பென்ஷன் இல்லை என்ற சூழ்நிலை இருந்ததாகவும், அதனை மாற்றி அமைத்துள்ளோம். அதாவது "2012 ஆம் ஆண்டுக்கு முன்பு, மகன் மகளோ அதாவது மாற்றுத் திறனாளியாக இருத்தால், அவர்களுக்கு பென்ஷன் இல்லை என்ற ஆணை இருந்தது. ஆனால் 2012-க்கு பிறகு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், 25 வயதை கடந்தாலும் அவர்களுக்கு பென்ஷன் கொடுக்கப்படும் என்ற ஒரு ஆணை" வந்தது என்றார்.

மாதம்தோறும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இந்த குறைத்தீர்ப்புக் கூட்டங்களை நடத்துவதாகவும், இதன் மூலம் அதிக அளவு ஓய்வூதியதாரர்கள் தங்களை நாடி வருவதாகவும் தெரிவித்தார்.

சைபர் குற்றங்கள் மூலம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனைத் தடுக்கும் வகையிலும், தாங்கள் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாகவும் ஜெயசீலன் கூறினார்.

இந்தியா முழுவதும் 33 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 2,10,000 ஓய்வூதியதாரர்கள் இருப்பதாகவும் பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் குறைத்தீர்ப்புக் கூட்டங்கள் நடத்தினாலும், குறைகள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் எனப் பார்த்தால், நிறைய பேருக்கு பென்ஷன் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அறியாமையில் வருகிறார்கள். அவர்களுக்கு கூட பென்ஷன் கிடைக்கு எனச் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்" எனவும் கூறினார்.

அடுத்ததாக ரெண்டு பென்ஷன் குறித்து பலருக்கு பல சந்தேங்கள் உள்ளது. அதாவது இராணுவத்திலும் வேலை பார்த்திருப்பார்கள், ரிட்டயர் ஆனா பிறகு மாநில அரசு பணியிலும் வேலை பார்த்திருப்பார்கள். அவங்களுக்கு ஏதாவது ஒரு பென்ஷன் தான் வழங்க வேண்டும் என 2012 ஆம் ஆண்டு முன்பு சட்டங்கள் இருந்தது. ஆனா 2012-க்கு பிறகு இரட்டை பென்ஷன் வாங்கலாம் என்ற விதி கொண்டு வரப்பட்டது.

இதுபோன்ற விதிகள் குறித்து பல ஓய்வூதியதாரர்களுக்கு தெரியதாதால், அவர்கள் இன்னும் பென்ஷன் கூட வாங்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link