திருப்பதி வைகுண்ட ஏகாதசி டோக்கன் : பக்தர்களுக்கு முக்கிய அப்டேட்
வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10 ஆம் தேதி கொண்டாப்படுகிறது. இதனையொட்டி திருப்பதியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இம்முறை திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பிக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 2025ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனையொட்டி திருப்பதியில் உள்ள அனைத்து சர்வதர்ஷன் டோக்கன் வழங்கும் மையங்களிலும் ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் EO ஸ்ரீ ஜே ஷியாமளா ராவ் அறிவுறுத்தலின் படி, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, டிடிடி பொறியியல் துறையின் மேற்பார்வையில், பக்தர்களுக்கான வரிசைகள், தடுப்புகள், கொட்டகைகள், பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறைகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
10, 11, 12 ஆகிய தேதிகளில் வைகுண்ட துவாரம் தரிசனத்திற்காக ஜனவரி 9ஆம் தேதி காலை 5 மணி முதல் மொத்தம் 1.20 லட்சம் டோக்கன்கள் வழங்கப்படும். இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 90 கவுன்ட்டர்களிலும், திருமலையில் ஒரு மையத்தில் 4 கவுன்டர்களிலும் டோக்கன்கள் வழங்கப்படும்.
திருப்பதியில் இந்திரா மைதானம், ராமச்சந்திரா புஷ்கரிணி, சீனிவாசம் வளாகம், விஷ்ணுநிவாசம் வளாகம், பூதேவி வளாகம், பைராகி பட்டேடாவில் ராமாநாயுடு மேல்நிலைப்பள்ளி, எம்.ஆர்.பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளி, ஜீவகோனாவில் ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளி, திருமலையில் பாலாஜி நகர் சமுதாய கூடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
இதேபோல், மீதமுள்ள நாட்களுக்கு (13ம் தேதி முதல் 19ம் தேதி வரை) மறுநாள் தரிசனத்திற்கு ஒரு நாள் முன்னதாக திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் மட்டும் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
திருமலையில் டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேர இடைவெளியில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று TTD வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேபோல், இந்த பத்து நாட்களில் கைக்குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், என்ஆர்ஐக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் போன்றோருடன் கூடிய பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனத்தை திருப்பதி திருமலை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இதேபோல், இந்த பத்து நாட்களில் கைக்குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், என்ஆர்ஐக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் போன்றோருடன் கூடிய பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனத்தை திருப்பதி திருமலை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.