கண் பார்வையை காக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!

Fri, 28 Oct 2022-9:56 pm,

வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் மற்றும் நமது அன்றாட உணவின் முக்கிய பகுதியாகும். வைட்டமின் ஏ கண் பார்வையை  கூர்மையாக்குவது மட்டுமின்றி, செல்கள் , உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. முட்டை மற்றும் கடல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வைட்டமின் ஏ கிடைக்கிறது.  அதே சமயம் இதற்காக  சைவ உணவு பிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை. வைட்டமின் ஏ நிறைந்த பல உணவுகள் உள்ளன.

கேரட்டில் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் (Beta Carotene) வடிவத்தில் உள்ளது. இது ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும், எனவே கேரட்டை சாப்பிடுவது உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும். ஒரு நடுத்தர அளவிலான கேரட்டில் 10190 சர்வதேச வைட்டமின் ஏ உள்ளது.  இது சராசரி தினசரி தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகளில் குறைவாக உள்ளது, ஆனால்  இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை வைட்டமின் ஏ சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது தினசரி தேவையில் 400% க்கும் அதிகமாகும். இதனை வேக வைத்து சாப்பிடுவது பலருக்கும்  பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். ஒரு நடுத்தர அளவிலான தக்காளி உடலின் தினசரி வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதத்தை வழங்குகிறது. இது தவிர, தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளது.

பாட்டாணியிலும் விட்டமின் ஏ நிறைந்துள்ளது. நீங்கள் 100 கிராம் பட்டாணி சாப்பிட்டால், உடலுக்கு 765 சர்வதேச அளவு வைட்டமின் ஏ கிடைக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link