Tech Tips: இணைய வேகத்தை இரு மடங்காக்க சில டிப்ஸ்!

Tue, 25 Apr 2023-9:51 pm,

வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பொதுவாகி விட்ட நிலையில், இணைய வேகம் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.  இணைய வேகம் மிகக் குறைவாக இருப்பதால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலையில்,  Wi-Fi ரவுட்டர் மூலம் பெறும் இணைய வேகத்தை இரட்டிப்பாக்கும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம். 

உங்கள்  Wi-Fi ரூட்டரை அமைப்பதற்கு உங்கள் வீட்டின் மைய பகுதி பொதுவாக சிறந்த இடமாகும். ஆனால் இது அனைத்து வீட்டிற்கும் சரியாக பொருந்தும் என சொல்ல இயலாது. நீங்கள் எங்கு அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது. 

ரவுட்டர் தங்கள் சிக்னலை கீழ்நோக்கி பரப்பும் தன்மையைக் கொண்டுள்ளன, எனவே கவரேஜை அதிகரிக்க ரூட்டரை முடிந்தவரை உயரமாக வைப்பது நல்லது. அதை உயரமான அலமாரியில் வைக்க முயற்சிக்கவும் அல்லது சுவரில் பொருத்தலாம்.

நம்மில் பலர் வைஃபை ரவுட்டரை ஆஃப் செவதே இல்லை. வைஃபை வேகத்தை அதிகரிக்க, அதை, 4-5 நாட்களுக்கு ஒரு முறை அதனை ஆன் மற்றும் ஆஃப் செய்ய வேண்டும். இதனால் கருவி இதன் மூலம் தானகவே அப்டேட் ஆகி வேகம் அதிகரிக்கும்.

ரவுட்டருக்கு அருகில் உள்ள சுவர்கள், பெரிய தடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சிக்னலில் குறுக்கிடுகின்றன. எடுத்துக்காட்டாக, மைக்ரோவேவ்கள் 2.4GHz பேண்டில் வலுவான சமிக்ஞையை வெளியிடுகின்றன. இது வைபை வேகத்தை பாதிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link