ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி உள்ளது. பகல் இரவு ஆட்டமாக பிங்க் பாலில் நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணி, 2வது டெஸ்டில் ஹேசல்வுட்க்கு பதிலாக ஸ்காட் போலண்டை அணியில் எடுத்துள்ளனர். இவர் பிங்க்-பால் டெஸ்டில் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் விளையாடுவாரா? எந்த அணி அவரை ஏலத்தில் எடுத்தது என்பது தொடர்பாக ரசிகர்கள் அதிகம் தேடி வருகின்றனர்.
துரதிருஷ்டவசமாக, ஸ்காட் போலண்ட் இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் பங்கேற்கவில்லை. ஒருவேளை யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே அவரால் பங்கேற்று விளையாட முடியும்.
2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். பின்பு சிட்னி டெஸ்டில் மீண்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, போலண்ட் வெற்றியை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பினார். தற்போது 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.