IND vs NZ: நன்றாக விளையாடியும் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்துக்கு அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
முகேஷ் குமார்
டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வந்த முகேஷ் குமார் சமீபத்தில் அணியில் வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறார். இந்தியாவுக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கும் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
யாஷ் தயாள்
இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் பங்களாதேஷ் தொடரில் அணியில் இருந்தார். இருப்பினும் அவர் பிளேயிங் 11ல் விளையாடவில்லை. தற்போது நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு இந்திய அணியில் இடம் பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். துலீப் டிராபியில் 2 அரைசதம் அடித்த போதிலும், நியூசிலாந்துக்கு தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அஜிங்க்யா ரஹானே
இந்த டெஸ்ட் தொடரிலும் அஜிங்க்யா ரஹானே இடம் பெற முடியவில்லை. மும்பை அணி மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அபிமன்யு ஈஸ்வரன்
உள்நாட்டு கிரிக்கெட்டில் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் அவருக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பை இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்தார் ஈஸ்வரன்.