IND vs ZIM: ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் நீக்கம்!
டி20 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி இந்த வாரம் ஜிம்பாப்வேக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 6 முதல் ஜூலை 14 வரை நடைபெற உள்ளது. இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமன் இணைந்துள்ளார்.
இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் ஜிம்பாப்வே புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் உலக கோப்பை அணியில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தற்போது மேற்கிந்திய தீவுகளில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
அங்கு ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக அவர்களால் ஜிம்பாப்வேவிற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உண்டாகி உள்ளது. எனவே முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும் மாற்று வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
"ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை தேர்வுக் குழு பெயரிட்டுள்ளது" என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரல் (WK), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ஜிதேஷ் சர்மா (WK), ஹர்ஷித் ராணா