இந்தியா - பாகிஸ்தான் அடுத்த உலக கோப்பையில் மோதல்! 2007 ரிப்பீட்டு

Fri, 20 Oct 2023-5:16 pm,

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுகிறது

 

இந்த தொடரை அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன

 

அமெரிக்காவில் நியூயார்க், புளோரிடா, டல்லாஸ் ஆகிய நகரங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது

 

எஞ்சிய போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும். இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த உலக கோப்பையில் முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

 

இரு அணிகளும் மோதும் போட்டியானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதனால் இன்னொரு பிளாக் பஸ்டர் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

 

இந்த உலக கோப்பை என்பது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு கடைசி உலக கோப்பையாக இருக்க அதிக வாய்ப்பும் உள்ளது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link