டெஸ்ட் போட்டியில் சேப்பாக்கத்தில் விராட் கோலி கிங் ஹா? இல்லையா?
சென்னை சேப்பாக்கத்தில் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் கோலியின் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடி உள்ளார். இதில் 6 இன்னிங்ஸ்களில் 44.50 சராசரியில் மொத்தம் 267 ரன்கள் அடித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 107 ஆகும். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த சதத்தை அடித்தார். அதன் பிறகு சதம் அடிக்கவில்லை.
இந்த ஒரு சதம் தவிர, சேப்பாக்கத்தில் விராட் கோலி இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார். சென்னையில் டெஸ்டில் அதிகமாக கோலி விளையாடவில்லை.
பங்களாதேஷ் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைத்து வடிவங்களிலும் சிறந்த ஒருவராக தனது பாரம்பரியத்தை மேலும் உறுதிப்படுத்த விராட் கோலிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்சிப் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற விராட் கோலியின் பார்ம் முக்கியமானதாக இருக்கும்.