இதுனால தான் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர்.. இந்தியன் 2 பட்ஜெட் இத்தனை கோடிகளா
இந்தியன் 2 திரைப்படம்: கடந்த ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் இந்தியன் 2. சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்த படம் திரையரங்கில் வெளியானது.
102 வயது தாத்தாவாக கமல்: இந்தியன் படத்தில் சேனாபதி-சந்துரு என்ற தந்தை மகன் இரட்டை வேட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததார். தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் 102 வயது முதியவராக நடித்திருந்தனர். ஆனால், அது துளியளவு கூட தெரியாத அளவிற்கு சண்டை காட்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.
கதறவிட்ட தாத்தா கமல்: விமர்சனங்களின் படி, படம் கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கமலின் சண்டை காட்சிகள் நன்றாக வந்திருப்பதாகவும், க்ளைமேக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியன் 3 படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதுவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மூன்று நாளில் 100 கோடி வசூல்: படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாட்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியன் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 25.6 கோடி வசூலித்துள்ளதாகவும், இரண்டாவது நாளில் 18.2 கோடியும், மூன்றாவது நாளில் 15.3 கோடி வசூலித்துள்ளது. ஓட்டு மொத்தமாக உலகளவில் மூன்று நாட்களில் இந்தியன் 2 படம் 109.15 கோடி வசூலித்துள்ளது.
இந்தியன் 2 நடிகர்-நடிகைகள்: இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த் நடித்திருக்கிறார். அவருடன் இதில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் பிரியா பவானி ஷங்கர், ஜகன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.
மறைந்த நடிகர்களின் விவரம்: இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில், நடிகர் விவேக்கின் காட்சிகள் AI மூலம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்: தற்போது பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 250 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.