15 வருட ஏக்கத்தை போக்க... கனவுகளுடன் ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி; கோட்சூட் கிளிக்ஸ்!
2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின், இந்தியா டி20 உலகக்கோப்பையை கைப்பற்றவில்லை.
2009, 2010, 2012, 2014 ஆகிய அடுத்தடுத்த டி20 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி இரண்டாவது சுற்றோடு வெளியேறியது.
2016ஆம் ஆண்டில், அரையிறுதி வரை வந்த இந்தியா, கடந்தாண்டு நடைபெற்ற தொடரில் இரண்டாவது சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
15 வருடங்கள் கழித்து, டி20 உலக்கோப்பையை வெல்லும் கனவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளது. வரும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் உடன் வரும் அக். 23ஆம் தேதி மோத உள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, அக்சர் படேல், ரவிசந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: ஷ்ரேயஸ் ஐயர், முகமது ஷமி, தீபக் சஹார், ரவி பிஷ்னோய்