Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்

Sun, 01 Dec 2024-5:26 pm,

உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே (Indian Railways New Rules) ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்களை செய்து கொண்டிருகிறது. பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் பயண சிக்கல்கள் ஏதும் இல்லாமல் அமைய புதிய விதிமுறைகளை மாத்தோறும் அமல்படுத்தி வருகிறது. 

ரயில் டிக்கெட் புக்கிங் முதல் ரயில் பயணிகளுக்கு உணவு டெலவரி செய்வது, ரயில் பயணிகள் தங்குமிடம், ரயில் டிக்கெட் ஆன்லைன் புக்கிங் உள்ளி பல தங்களில் இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன. அதில் இந்திய ரயில்வே கொண்டு வந்திருக்கும் மிக முக்கியமான 5 புதிய விதிமுறைகள், மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல் ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் எதிர்கால ரயில் பயணத்துக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

இந்திய ரயில்வே அண்மையில் முன்பதிவு நாட்களை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்தது. அதாவது, கடைசி நேரத்தில் பயணிகள் ரயில் டிக்கெட்டை அதிகளவில் கேன்சல் செய்வதை தடுக்கும் வகையில் இந்த புதிய விதிமுறை அண்மையில் நடைமுறைக்கு வந்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த வரிசையில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு, வெளிநாட்டு பயணிகளுக்கான முன்பதிவு காலம், லக்கேஜ் கொண்டு செல்வது என்பது உள்ளிட்ட விதிகளில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1.  தாஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற சில பகல்நேர விரைவு ரயில்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான குறைந்த நேர வரம்புகளைத் தொடரும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. அண்மையில் நடைமுறைக்கு வந்த ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு விதிமுறை வெளிநாட்டு பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் ரயில் பயணத்துக்கு 365 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து கொள்ள முடியும். அந்த விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியர்கள் 60 நாட்களுக்கு உள்ளாக மட்டுமே ரயில் பயணத்திற்கான முன்பதிவை செய்ய முடியும்.

 

3.அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், அந்த பயணத்துக்கான டிக்கெட் ரத்து செயல்முறை வழக்கம்போல் இருக்கும். ஆனால் அதன்பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் புதிய விதிமுறைப்படி மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய முடியும். 

4. இந்திய ரயில்வே புதிய விதிமுறையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வராமல் இருக்கும் பயணிகளை குறித்த விவரங்களை சரியாக கையாள திட்டமிட்டுள்ளது. முன்பதிவு செய்தவர் ஒருவர், ரயிலில் பயணிப்பது ஒருவர் என்ற ஆள்மாறாட்ட பிரச்சனைகளை தடுக்க இம்மாதம் முதல் தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளது. ஒருவர் முன்பதிவு செய்து ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை என்றால் 48 மணி நேரத்துக்கு முன்பாக அருகில் இருக்கும் ரயில் நிலையம் சென்று புதிதாக பயணிக்க இருக்கும் நபர் குறித்த தகவலை ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மற்றொருவர் புக்கிங் செய்த ரயில் டிக்கெட்டில் பயணிக்க முடியும்.

5. ரயில் பயணத்தின்போது லக்கேஜ் எடுத்துச் செல்வதில் வரம்பு மீறிக்கு எடுத்துச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஒரு பயணி குறிப்பிட்ட அளவிலான லக்கேஜை கட்டணமின்றி, அதாவது இலவசமாக எடுத்துச் செல்ல முடியும். ரயில்வே விதிமுறைகளுக்கு மேலாக லக்கேஜ் கட்டணம் செலுத்தாமல் எடுத்துச் செல்பவர்கள் இனி கட்டாயம் அபராதம் விதிக்கப்படுவார்கள் என மத்திய ரயில்வே அனைத்து ரயில் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link