பிட்டாக மற்றும் பளபளப்பாக இருக்க ஸ்மிருதி மந்தனாவின் வொர்க்அவுட் சீக்ரெட்ஸ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரரான ஸ்மிருதி மந்தனா தனது அழகு ரகசியங்களை பற்றி தெரிவித்துள்ளார்.
சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க உணவில் நிறைய புரோட்டீன் எடுத்து கொள்ள வேண்டும். புரோட்டீன் ஷேக்குகள், முட்டைகள் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வொர்க்அவுட்டைப் பொறுத்தவரை, போட்டிகள் இருக்கும் நேரத்தில் லேசான வொர்க்அவுட்டும், போட்டிகள் இல்லாத நாட்களில் கடினமான வொர்க்அவுட்டை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
வழக்கமான உடற்பயிற்சி செய்வது உடலை பிட்டாக வைத்திருக்க உதவுவது மட்டும் இல்லாமல், பிரகாசமாக இருக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கிறது.
தனது முக அழகிற்காக எந்த ஒரு தயாரிப்புகளையும் பயன்படுத்துவதில்லை என்று ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். அதிக நேரம் வெயிலில் இருப்பதால் வாஸ்லைன், சன்ஸ்கிரீன் மட்டும் பயன்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
கடுமையான வெயில் மற்றும் மாசுபாட்டிலிருந்து சருமத்தை பாதுகாக்க எப்போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இந்த லோஷன் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது.