உலகம் சுற்றும் நாயகன்கள் நிறைந்த இந்தியா... RBI தரவுகள் கூறும் ஆச்சரிய தகவல்..!!
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணத்துக்கான செலவை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. முன்பை விட இப்போது மில்லியன் கணக்கான இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தேர்வு செய்கிறார்கள் என்று தரவுகள் கூறுகிறது.
வெளிநாடுகளில் விடுமுறை நாட்களிலும், உறவினர்களுக்கான தங்கும் செலவுக்காகவும் இந்தியர்கள் அதிகம் செலவு செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள், வெ:ளிநாட்டு சுற்றூலாவுக்கான இந்தியர்கள் ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் வெளிநாட்டுப் பயணத்திற்காக 2023-24ல் மொத்தம் 17 பில்லியன் டாலர் (ரூ. 1,41,800 கோடி) திரும்பப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டின் 13.66 பில்லியன் டாலர்கள் என்ற அளவை விட 24.4 சதவீதம் அதிக அளவில் வெளிநாட்டு பயணத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான செலவுகளை பொறுத்தவரை 2013-14-ல் 1.5 சதவீதமாகவும், 2018-19-ல் 35 சதவீதமாகவும் இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2018-19ல் சராசரியாக மாதத்திற்கு 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,300 கோடி) மட்டுமே இருந்தது என ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.
நடுத்தர மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பயணம் செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் அதிக பணத்தை இந்தியர்கள் அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தைப் பராமரித்தல் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற நோக்கங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு அதிக பணத்தை அனுப்பியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, 2023-24ல் எல்ஆர்எஸ் விதியின் கீழ் வெளிநாடு அனுப்பப்பட்ட மொத்த பணம் 31.73 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 27.14 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது இந்த ஆண்டு 16.91% அதிகரித்துள்ளது.