இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தாக்கிய இந்திய கப்பல்... சுவாரஸ்யமான தகவல்கள்..!

Mon, 11 Jan 2021-6:09 pm,

1940 டிசம்பரில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது, ​​இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குச் செல்லும் எஸ்.எஸ். கேர்சொப்பா (SS Gairsoppa) கப்பலின் எரிபொருள் தீர்ந்துவிட்டது. வெள்ளி நிரப்பபட்ட எஸ்.எஸ். கெர்சொப்பா கப்பல் இந்தியாவில் இருந்து பிரிட்டனில் உள்ள அயர்லாந்திற்கு சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில், எஸ்.எஸ். கெர்சொப்பா கப்பல் மீது ஒரு ஜெர்மன் நீர் மூழ்கி கப்பல் தாக்கியது. இதன் காரணமாக கப்பல் கடலில் மூழ்கியது.

தாக்குதல் நடந்த நேரத்தில் எஸ்.எஸ். கெர்சொப்பா (SS Gairsoppa) கப்பலில் 85 பேர் இருந்தனர், அவர்கள் அனைவரும் இறந்தார். கப்பல் மூழ்கியவுடன், இந்தியாவின் இந்த புதையல் கொண்ட கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இந்தியா இரண்டாம் உலகப் போரில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும்,  இந்தியா பெருமளிவில் பாதிக்கப்பட்டது.

பின்னர் 2011 இல், தொல்பொருள் துறை, கெர்சொப்பா கப்பல் (SS Gairsoppa)கடலில் மூழ்கியிருப்பதைக் கண்டறிந்தது. இந்த கப்பலில் இருந்து 1400 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கிடைத்தது. இந்த விலைமதிப்பற்ற வெள்ளியைக் கண்டுபிடித்த குழு ஒடாசி கடற்படை குழுமத்தின் (Odyssey Marine)ஆராய்ச்சியாளர்கள், கப்பலில் இருந்து சுமார் 99 சதவீத வெள்ளியைப் எடுத்ததாகக் கூறினர். கடலில் மூழ்கியிருந்த ஒரு கப்பலில் இருந்து வெள்ளியைப் பெறுவது மிகவும் சவாலான பணியாக இருந்தது என்று கூறிய ஒடாஸி மரைன் குழும அதிகாரி கிரெக் ஸ்டாம்  கெர்சொப்பா கப்பலில் ஒரு சிறிய பெட்டியில் வெள்ளி வைக்கப்பட்டிருந்தது என்று கூறியிருந்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனை பல்வீனப்படுத்த கடல் வழியாக செய்யப்படும் பிரிட்டனின் வணிகத்தை நிறுத்த விரும்பியது ஜெர்மன் படை.  அப்போதைய பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், ஜெர்மனை நினைத்து அஞ்சினார். இரண்டாம் உலகப் போரின்போது, ​​ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையிலான அட்லாண்டிக் பெருங்கடலின் பெரும்பகுதி ஜெர்மன் கடற்படையால் கைப்பற்றப்பட்டது. அந்த நேரத்தில் எந்த நாட்டின் கப்பலும் ஜெர்மன் கடற்படையின் கண்களில் இருந்து தப்ப முடியவில்லை.

கெர்சொப்பா கப்பலில், வெள்ளி உட்பட 7 ஆயிரம் டன் எடையுள்ள சாமான்கள் இருந்தன . அதில் இரும்பு பொருட்களும் அடங்கும். ஜெர்மன் கடற்படை எஸ்.எஸ். கெர்சொப்பா கப்பலைத் தாக்கியபோது, ​​அது 8 நாட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தாக்குதலுக்குப் பிறகு, இந்த கப்பல் அதில் இருந்த அனைத்து பொருட்களுடன் கடலில் மூழ்கியது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link