வெரி சிம்பிள் SIP முதலீடு செய்யுங்கள்! பணத்தை அள்ளுங்கள்! ஆனால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!
)
இந்தியாவை பொறுத்த வரை பணத்தை இன்வெஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் மார்க்கெட் பற்றிய அவ்வளவு நாலேஜ் இருக்காது மற்றும் நேரமின்மை காரணமாக மார்கெட்டில் முதலீடு செய்வதில் தயக்கம் ஏற்படுகிறது. முதலீடுகள் மூலம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம். அதற்கு பொறுமை மற்றும் நிதானம் அவசியம். கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பது எப்படி எனப்தைக் குறித்து பார்ப்போம்.
)
தற்போது நாடு முழுவதும் முதலீடு துறையில் பேசிபொருளாக இருப்பது SIP தான். உங்களுக்கு மார்க்கெட் பற்றி தெரியாது, நேரமில்லை, எதில் முதலீடு செய்வது எனக் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு SIP பெஸ்ட் ஆப்ஷன் ஆகும். SIP-ன் முழு அர்த்தம் என்னன்னா சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan) ஆகும். SIP-ல் இன்வெஸ்ட் பண்ணுவ்தற்கு உங்களுக்கு மார்க்கெட்டை பற்றி அதிகம் தெரிஞ்சுருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. SIP மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
)
நீங்கள் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட செலக்ட் பண்ணி, அதுக்கப்புறம் உங்களோட SIP-ஐ செட் பண்ணுங்க. அதாவது ஒவ்வொரு மாசமும் மியூச்சுவல் ஃபண்ட்டில் ஒரு பிக்சட் அமௌன்ட் இன்வெஸ்ட் பண்ண வேண்டியது இருக்கும். உதாரணத்துக்கு நீங்க ஒவ்வொரு மாசமும் ₹1000 இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க என்றால், உங்களுடைய ஃபண்ட்டில் ஆட்டோ டெபிட் செட் செய்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாசமும் உங்களுடைய SIP-க்கு உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ஒவ்வொரு மாசமும் டெபிட் ஆயிட்டே இருக்கும். ஆட்டோ டெபிட் செட் செய்து இருப்பதால், மாதம்தோறும் SIP முதலீட்டுக்கு பணம் சென்று விடும். தினமும் அதை பார்க்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. நீங்கள் நிம்மதியா உங்களோட பணியை செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது சாமன்ய நபர்களும் செய்யக் கூடிய முதலீடு தேர்வாகும்.மியூச்சுவல் ஃபண்ட் இரண்டு விதமா இருக்கிறது. ஒன்று ஆக்டிவ்லி மியூச்சுவல் ஃபண்ட் (Actively Mutual Fund) மற்றும் இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Index Mutual Fund) ஆகும்.
ஆக்டிவ்லி மியூச்சுவல் ஃபண்ட் (Actively Mutual Fund) என்பது ஒரு மார்கெட் எக்ஸ்பர்ட் தொடர்ந்து மார்க்கெட் ஏற்றம் இறக்கத்திற்கு ஏற்ப இன்வெஸ்ட் செய்துக்கொண்டே இருப்பார்.
மறுபுறம் இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Index Mutual Fund) என்பது பணத்தை முதலீடு செய்துவிட்டு மறந்துடலாம் என்றே கூட சொலல்லாம். அதாவது நீண்ட காலத்திற்கு (10, 15, 20 வருடம்) முதலீடு செய்து அதன்பிறகு பணத்தை எடுத்டுக்கலாம்.
இந்த ஃபண்ட்ல உங்களுடைய பணம் நாட்டின் டாப் 50 கம்பெனிகளில் முதலீடு செய்யப்படும். மார்கெட் இறக்கம் அடைந்தாலும் நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதால், அந்த கம்பெனிகள் பெஸ்ட்டாக பெர்ஃபார்ம் பண்ணியே தீரும். இறுதியாக கண்டிப்பா நாம் முதலீடு செய்ததை விட அதிய பணம் கிடைக்கும்.
தற்போது நீங்கள் யோசிக்கலாம் ஆக்டிவ்லி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இரண்டையும் பார்க்கும் போது ஆக்டிவ்லி மியூச்சுவல் ஃபண்ட் தான் பெஸ்ட் எனத் தோன்றும். ஏன்னா அங்கு ஒரு எக்ஸ்பர்ட் தொடர்ந்து மார்க்கெட்டை கவனித்து முதலீடு செய்து வருகிறார். இதன் காரணமாக நமக்கு ரிட்டர்ன்ஸும் அதிகமாக கிடைக்கலாம். ஆனால் நமக்கு ஷார்ட் டெர்ம்ல அதிக ரிட்டர்ன் கொடுக்கலாம். ஆனால் நீண்ட முதலீட்டிற்கு இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ் தான் பெஸ்ட்.
இங்கு மூன்று விடியங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். முதலில் நீங்கள் எவ்வளவு பணத்தை மார்க்கெட்டில் முதலீடு பண்றீங்களோ அவ்வளவு அதிகமான ரிட்டர்ன் கிடைக்கும். இரண்டாவது நீங்கள் எவ்வளவு காலத்துக்கு மார்க்கெட்டில் பணத்தை முதலீடு பண்றீங்களோ உங்களுக்கு நிச்சயமா நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைக்கும். மூன்றாவது பொறுமை மீக முக்கியம். ஒருவேளை நீங்கள் போட்ட பணம் நஷ்டம் ஆகிறது என்றால், ஸ்கிப் பண்ணிடாதீங்க 5 அல்லது 10 வருடம் வெயிட் பண்ணுங்கள். டெபனிட்டா ப்ராஃபிட்தான் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்-ல நீங்கள் இரண்டு விதமா இன்வெஸ்ட் பண்ணலாம். ஒரே தடவை அதிக பணத்தை முதலீடு செய்யலாம் அல்லது ஒவ்வொரு மாசமும் கொஞ்சம் கொஞ்சமா இன்வெஸ்ட் பண்ணிட்டு வரலாம்.