IPL 2022 ஏலத்துக்கான கவுண்டன் தொடங்கியது
மொத்தம் 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இந்திய வீரர்கள் 370 பேர். வெளிநாட்டு வீரர்கள் 220 பேர். இந்த ஆண்டு புதியதாக 2 அணிகள் சேர்ந்துள்ளன. அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன், லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கான பட்டியலில், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர, இளம் வீரர்களான இஷான் கிஷன், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் இஷான் கிஷனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவர்களுக்கு அந்தளவுக்கு வாய்ப்பு இருக்குமா? என்பது கேள்விக்குறி.
இந்திய U19 கேப்டன் யாஷ் துல், விக்கி ஓஸ்வால், ராஜவர்த்தன் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஷாருக்கான், ஆவேஷ்கான் மற்றும் தீபக் ஹூடாவை எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கலாம்.
ஏலப்பட்டியலில் இருப்பவர்களில் 42 வயதான தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் அதிக வயது கொண்ட வீரர். ஆப்கானிஷ்தானின் 17 வயதான நூருல் அகமது, ஏலத்தில் பங்கேற்கும் மிகவும் இளம் வயது வீரர்
10 அணிகளில் அதிக காஷ்பேக் வைத்திருக்கும் அணி பஞ்சாப். அந்த அணி கைவசம் 72 கோடி ரூபாய் உள்ளது. ஸ்டார் பிளேயர்களை தூக்க ரெடியாக உள்ளது.