CSK Vs SRH : “தோத்துட்டே இருக்கீங்களே..” சி.எஸ்.கே ரசிகர்களின் குமுறல்கள்! வைரலாகும் மீம்ஸ்..

Sat, 06 Apr 2024-1:22 pm,

நம்ம ஊரு மீம் கிரியேட்டர்களுக்கு ஐபிஎல் திருவிழா ஆரம்பித்தாலே கையில் லட்டு கிடைத்தது போல படு குஷியாக இருக்கும். இந்த சீசனை பொறுத்தவரை, சென்னை அணி 4 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இன்னிங்க்ஸ் முடிவில் சென்னை அணி 165 ரன்களை அடித்தது. அடுத்த இன்னிங்க்ஸில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 18 ஓவர்களிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை சேஸ் செய்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்வி ஏற்படுத்திய தழும்பை சிரிப்பு வரவழைக்கும் மீம்ஸ் மூலம் ரசிகர்கள் ஆற்றி வருகின்றனர். 

இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியும் ஜெயிக்காத மும்பை அணி, ஒரு போட்டி மட்டும் ஜெயித்த பெங்களூரு அணியின் லிஸ்டில் சேர்ந்து விடுவோமோ?

ஒரு வேளை, புதிதாக கமெண்ட்ரி கொடுக்க வந்திருக்கும் கோபிநாத்தை பற்றி கூறுகிறார்களோ?

விட்டா 10 ஓவருக்குள்ளையே மேட்சை முடித்திருப்பர்கள் இந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள்!

எப்போதும் ஜெயிக்கும் ஹைதராபாத் அணியிடமே இந்த நிலமையா?

“யாருன்னு தெரியாம கைய வெச்சுட்டாங்க போல..”

“சொல்லுங்க ஜட்டு சொல்லுங்க..எப்படி அந்த 10 ரன் அடிச்சீங்க?”

“தோனி ஆடியும் ஒரு பிரயோஜனமும் இல்லாம போச்சே...” சென்னை அணி, தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியுற்றதால், “தோத்துட்டே இருக்கீங்களே டீம்” என்றும் இணையத்தில் குமுறி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link