ஷாருக்கான் vs காவ்யா மாறன்: இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது?
கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 இறுதி போட்டியில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
காவ்யா மாறன் தனது அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அளித்த ஆதரவின் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
லண்டனில் வணிகவியலில் பட்டம் பெற்ற காவ்யா மாறன் சன் குழுமத்தில் சன்ரைசர்ஸ் அணியையும், பிற நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறார்.
பாலிவுட்டின் "கிங் கான்" என்று அழைக்கப்படும் ஷாருக் கான் கொல்கத்தா அணியின் உரிமையாளராக உள்ளார். இந்த ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம் 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 82வது இடத்தில் இருக்கும் காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ. 24,000 கோடி ஆகும்.
மறுபுறம் ஷாருக்கானின் நிகர மதிப்பு சுமார் ரூ. 6000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார் ஷாருக்கான்.