இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ்... அப்போ மற்ற அணிகள்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நான்கு வீரர்கள் உலகக் கோப்பைக்கு தேர்வாகி உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர். இதில், இஷான் கிஷனுக்கும், சூர்யகுமாருக்கும் இது முதல் உலகக் கோப்பை தொடராகும்.
குஜராத் டைட்டன்ஸ் அணயில் இருந்து இரண்டு வீரர்கள் உள்ளனர். துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆஸ்தான ஓப்பனராக உள்ள சுப்மான் கில்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்தும் 2 வீரர்கள் உள்ளனர். நட்சத்திர வீரர் கோலி மற்றும் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சிராஜ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அதன் கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்டருமான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்தூல் தாக்கூர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்முறை ஜடேஜா மட்டும் தேர்வாகி உள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் இருந்து கே.எல்.ராகுல் தேர்வாகியுள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து எந்த இந்திய வீரரும் உலகக் கோப்பைக்கு தகுதிபெறவில்லை.