பொங்கலுக்கு ரூ.1000 கிடையாதா...? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் சிக்கலா...?

Tue, 07 Jan 2025-10:54 pm,

பொங்கல் பண்டிகை (Pongal 2025) வரும் ஜன. 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜன. 14ஆம் தேதியில் இருந்து ஜன. 19ஆம் தேதிவரை பொங்கல் விடுமுறையை ஒட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Governmet) சார்பில் ரேசன் அட்டைத்தாரர்களுக்கு, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. 

 

ரேசன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு (Ration Card Holders) ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் ரேசன் கடைகள் விநியோகம் செய்யப்பட்டது. நாளை மறுதினம் (ஜன. 9) முதல் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. 

 

கடந்தாண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் ரூ.1000 ரொக்கமாகவும் (Rs 1000 For Pongal) வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு நிதிச்சுமை காரணமாக ரூ.1000 ரொக்கம் பொங்கல் தொகுப்பில் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், நல்ல சூழல் விரைவில் உருவாகும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். 

 

இருப்பினும், தற்போது கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) பொங்கல் தொகுப்பில் ரூ.1000 குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

 

நாளை மறுதினம் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு பொருள்கள் (Pongal Special Gift Pack 2025)  விநியோகம் தொடங்கும் நிலையில், நாளைக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஆனால், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (Erode East By-Election 2025) தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் சிறப்பு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் கூறப்படுகிறது. ஆனால், இடைத்தேர்தலுக்கும், இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பொங்கல் தொகுப்பில் ரூ.1000 வழக்கமாக கொடுக்கப்படும் ஒன்று என்பதால் இந்த அறிவிப்பு வெளியாக எவ்வித தடையும் இல்லை.

 

இருப்பினும், தமிழக அரசு பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம் அறிவிப்பை வெளியிடுமா அல்லது இந்தாண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் பொருள்கள் மட்டும் வழங்கப்படுமா என்பது நாளைக்குள் (ஜன. 8) உறுதியாகும் எனலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link