Fact Check: காதலர் தினத்திற்காக தாஜ் ஹோட்டல் சலுகை தருவது உண்மையா?

Tue, 02 Feb 2021-7:55 pm,

தாஜ் ஹோட்டலில் தங்க விருப்பமா? இந்த காதலர் தினத்தை முன்னிட்டு தாஜ் ஹோட்டலில் தங்க ஒரு வாய்ப்பு என்று வாட்ஸ்அப்பில் வந்த செய்தி வந்திருக்கிறதா? இதை தவறாமல் படிக்கவும்...

(Pic: Zee Media)

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும்   செய்தி: வாட்ஸ்அப் குழுக்கள், வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் "நான் தாஜ் ஹோட்டலில் இருந்து ஒரு பரிசு அட்டையைப் பெற்றேன், 7 நாட்கள் தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது" என்று ஒரு வைரஸ் செய்தி பரவலாக பகிரப்படுகிறது. 

(Pic: Twitter)

செய்தியுடன் இணைப்பு அனுப்பப்படுகிறது: செய்தியுடன் ஒரு இணைப்பும் வருகிறது. அந்த இணைப்பைக் கிளிக் செய்தவுடன், "TAJ EXPERIENCES GIFT CARD TAJ" என்ற செய்தி வரும். ஹோட்டல் காதலர் தினத்தைக் கொண்டாட 200 பரிசு அட்டைகளை அனுப்பியுள்ளது. அதில் 7 நாட்கள் தங்குவதற்கான வாய்ப்பு இந்த அட்டைகளில் ஒன்றில் உள்ளது. அதைப் பயன்படுத்தி TAJ குழுமத்தின் எந்த ஹோட்டலிலும் இலவசமாக தங்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது சரியான பரிசு பெட்டியைத் திறக்க வேண்டும். 3 முறை முயற்சிகலாம், உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்துப் பாருங்கள்!"

(Pic: Twitter)

இணைப்பைக் கிளிக் செய்த பிறகு கேட்கப்படும் கேள்விகள்: சரியான பட்டனை அழுத்தும்போது, கேள்விகள் பக்கம் திறக்கும். அதன் பிறகு பெட்டிகளை கிளிக் செய்து, அவர்கள் பரிசு அட்டையை வென்றிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

(Pic: Twitter)

5 குழுக்களுக்கு செய்தியை அனுப்ப வேண்டும்: பரிசு அட்டையை வென்றால், வாட்ஸ்அப்பில் ஐந்து குழுக்கள் அல்லது 20 நபர்களுக்கு செய்தியை அனுப்புமாறு கேட்கப்படும்.

(Pic: Twitter)

தாஜ் ஹோட்டல் ட்விட்டர் மூலம் தெளிவுபடுத்துகிறது: தாஜ் ஹோட்டல்கள் அதன் ட்விட்டர் பக்கம் மூலம் இந்த வைரல் செய்தி தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.   தாஜ் ஹோட்டல் / ஐ.எச்.சி.எல் அத்தகைய எந்தவொரு விளம்பரத்தையும் வழங்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தாஜ் ஹோட்டல் தெளிவுபடுத்தியுள்ளது.

(Pic: Twitter)

மும்பை போலீஸ் சைபர் பிரிவு எச்சரிக்கை: மும்பை போலீசின் சைபர் பிரிவு இந்த பரிசு செய்தி தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற இணைப்பு வந்தால், அதைக் கிளிக் செய்யவேண்டாம். அந்த செய்தியை ஒரு முறை கிளிக் செய்தால் கணினி அல்லது தொலைபேசியிலிருந்து கடவுச்சொற்கள் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற தரவைத் திருடக்கூடிய தீம்பொருள் அதில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று சைபர் போலீசார் எச்சரிக்கின்றனர்.

(Pic: Twitter)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link