கண்டவுடன் காதல் வருவது நல்லதா? கெட்டதா? பதிலை தெரிஞ்சிக்கோங்க..
கண்டவுடன் காதல் வருவது சரியா? தவறா? அப்படி வருவது முதலில் காதலாக இருக்குமா? என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் வரலாம். சரி, கண்டவுடன் ஒருவருக்கு காதல் வருவது எப்படி?
கண்டவுடன் காதல் வருவது, முழுக்க முழுக்க ஒருவரின் வெளி அழகு மற்றும் முக தோற்றத்தை வைத்துதான் அமையும். இதற்கு நம் உடலில் இருக்கும் சில ஹார்மோன்களும் காரணம் என விஞ்ஞானம் கூறுகிறது.
உங்கள் கண்களுக்கு ஒருவர் அழகாகவும் தனித்துவமாகவும் தெரியும் நபர், பிறருக்கு அப்படி தெரியாமல் போகலாம். அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் உங்களுக்காக படைக்கப்பட்டவர்/அனுப்பப்பட்டவர் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நம்பகத்தன்மை:
கண்டவுடன் ஒருவர் மீது காதல் வருவதாலும், அவருடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்வதாலும் அவர் மீது அதீத நம்பிக்கை ஆரம்பத்திலேயே ஏற்படும். ஆனால், ஒருவரை பற்றி தெரியாமல் அவர் மீது அதிக நம்பிக்கை வைப்பது பின்னாளில் உங்களுக்கே ஆப்படித்து விடும்.
குறைவாக அறிந்திருத்தல்:
ஒருவரை பார்த்தவுடன் பிடிக்கிறது என்றால், அவர் மீது உங்களுக்கு உடல் ரீதியான ஈர்ப்புதான் அதிகமாக இருக்குமே அன்றி, அவரை பற்றி வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாது. இதனால், அவர் குறித்து நீங்கள் நினைத்து வைத்திருக்கும் பல விஷயங்கள் வெறும் பிம்பமாக மட்டும் இருக்கலாம். ஒருவரை பற்றி ஒன்றுமே தெரியாமல் உங்கள் மனதை கொடுப்பது முறையானதா?
மோகம்:
கண்டவுடன் வருவது காதலா அல்லது காமமா என்பது பலருக்கும் புலப்படாத ஒன்றாக இருக்கிறது. எனவே, சமயங்களில் உங்கள் மோகம் கண்ணை மறைத்து விடலாம்.
ஏமாற்றம்:
கண்டவுடன் வரும் காதல், பல சமயங்களில் உங்களை ஏமாற்றமடைய செய்து விடலாம். நீங்கள் நினைத்த அந்த நபர், உங்கள் அன்பை வைத்து உங்களை யூஸ் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இணக்கம்:
பல சமயங்களில், இருவர் ஒன்றாக வாழ்வதற்கு அவர்களுக்குள் இணக்கமான சூழல் அமைவதும், மனம் ஒத்துப்போவதும் மிகவும் அவசியம் ஆகும். கண்டவுடன் வரும் காதலில் அது இல்லாமல் போய் விடும்.