8வது ஊதியக் குழு கிடையாதா? அரசு ஊழியர்கள் ஷாக்! புதிய சம்பள உயர்வு முறை வருகிறதா?

Wed, 18 Dec 2024-6:29 pm,

8வது ஊதியக் குழுவுக்கு பதிலாக மத்திய அரசு ஒரு புதிய முயற்சியை நடைமுறைபடுத்தப் போவதாக வெளியாகி உள்ள தகவல் என்னவென்றால், 'உங்கள் வேலையின் செயல் திறனை பொறுத்து உங்கள் சம்பளம் உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஊதியக் குழுவை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசு ஊழியர்கள் இடையே 8வது ஊதியக் குழு அமல்படுத்துவது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கான முக்கியமான காரணம் 7வது ஊதியக் குழு தான். 2016 ஆம் ஆண்டு தான் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 7வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தது. அப்பொழுது அரசு ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்ச தொகை ரூ.7000-லிருந்து ரூ.18000 ஆக உயர்ந்தது. இதுவே உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ரூ. 25 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.

ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய கமிஷன் அமைக்கப்படுகிறது. அப்படி பார்த்தால், 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய கமிஷன் அமைக்க வேண்டும். அதாவது 8வது ஊதியக் குழுவை கொண்டு வரணும். ஆனால் புதிய கமிஷன் அமைக்க குறைந்தது இரண்டு வருடங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதேநேரம் அரசு தரப்பில் இருந்து 8வது ஊதியக் குழு தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. 

8வது ஊதியக் குழு எப்போது கொண்டு வரப்படும்? அதுத்தொடர்பாக அறிவிப்பு எப்பொழுது வரும்? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சகம் சமீபத்தில் 8வது ஊதியக் குழு "தற்போது பரிசீலனையில் இல்லை" என்று கூறியது. இது ஊகங்களைத் தூண்டியுள்ளது. சம்பளத்தை மாற்றியமைக்க மத்திய அரசாங்கம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்த போகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறுபுறம் அரசு ஊழியர்கள் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால், மேலும் அவர்களை காக்க வைக்காமல் சம்பள மாற்றங்களை மத்திய அரசு அனுமதிக்கும் எனத் தெரிகிறது. எனினும், இதுவரை தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. அதுவரை நிச்சயமற்ற நிலை நீடிக்கும்.

8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். அதாவது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 முதல் ரூ.30,000 ஆக உயர்த்த வேண்டும். ஃபிட்மென்ட் காரணி உயரும். ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

8வது சம்பள கமிஷன் கொண்டு வந்தால் மத்திய அரசுக்கு கூடுதல் செலவினம் அதிகரிக்கும். இதன்காரணமாக பொது நிதியை பாதிக்கலாம். ஆனாம் மறுபுறம் நுகர்வோரின் செலவினம் அதிகரிக்கும். அதிக சம்பளம் கொடுத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரித்து, பொருளாதாரத்திற்கு உதவும்.

7வது ஊதியக் குழுவால் அரசு செலவினம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 8வது ஊதியக் குழு அமைத்தால் இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசு கருதுகிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வில் பெரிய மாற்றம் இருக்காது எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதேநேரத்தில் 8வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பதிலா ஒரு புதிய நடைமுறையை கொண்டுவரப் போவதாகத் தகவல். அதாவது அரசு ஊழியர்களின் ப்ரோடெக்டிவிட்டி, செயல் திறன் மற்றும் பணவீக்கம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், இதற்கான வழிமுறைகள் எல்லாம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய நடைமுறையை அமைக்கப்பட்டால், தனியார் துறையில் இயர்லி ஒன்ஸ் அப்ரைசல் கிடைப்பது போல கவர்மெண்ட் செக்டார்லியும் கொண்டு வரப்படும். இயர்லி ஒன்ஸ் கவர்மெண்ட் எம்ப்ளாயிஸ் உடைய ப்ரொடக்டிவிட்டி பேஸ் பண்ணி, அப்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப சேலரி ஹைக் கிடைக்கும். இந்த புதிய நடைமுறை மூலமாக சென்ட்ரல் கவர்மெண்ட் எம்ப்ளாயிஸ் சேலரியில் அடிக்கடிக்கு மாற்றம் வரும். திறமையான எம்ப்ளாயிஸ் அனைவரையும் பெரிய அளவில் ஊக்கவிக்க முடியும். எனவே புதிய நடைமுறை அமல் செய்யப்பட்டால் சம்பள கமிஷன் நிறுத்தப்படும் எனத் தகவல். 

8வது ஊதியக் குழு, புதிய நடைமுறையை அமைப்பது அல்லது சம்பள கமிஷன் நிறுத்தப்படுவது குறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link