சாதனைக்காக மெதுவாக விளையாடினாரா விராட்...? கேப்டன் ரோஹித் சர்மா சொன்னது என்ன?
IND vs SA: நடப்பு உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலி சதத்தினாலும், ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சாலும் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருப்பினும், விராட் கோலி சாதனை சதத்திற்காக மிக மெதுவாக விளையாடி இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.
Virat Kohli: போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி,"வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விளையாட்டை சற்று வித்தியாசமாக பார்க்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக தொடங்கும் போது, அது ஒரு சிறப்பான உணர்வாக இருக்கும், அதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். ஆனால் பந்து பழையதாக மாற, நிலைமை முன்பு போல் இன்றி வேறு விதமாக மாறிவிடும். அணி நிர்வாகத்தின் செய்தி தெளிவாக இருந்தது. நான் கடைசி வரை விளையாட வேண்டும் என்றனர், என்னைச் சுற்றி விளையாடுபவர்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்பதுதான்" என்றார்.
Rohit Sharma: விராட் கோலி குறித்து ரோஹித் கூறுகையில்,"ஆடுகளம் எளிதானதாக இல்லை. இந்த ஆடுகளத்தில் விராட் கோலி போன்ற ஒருவர் உங்களுக்குத் தேவைப்படுவார்" என பாராட்டு தெரிவித்தார்.
Jadeja: ரவீந்திர ஜடேஜா கூறுகையில், "விராட் கோலிக்கு இது சிறப்பான சதம். இது 260-270 ரன்களை எடுக்கும் ஆடுகளம்தான். பந்து திரும்பியது, அவர் (விராட்) தொடர்ந்து விளையாடி எங்கள் ஸ்கோரை 300-ஐ கடக்க வைத்தார்" என்றார்.
Shreyas Iyer: ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "விராட் கோலியுடன் பேட்டிங் செய்வதை நான் மிகவும் ரசிக்கிறேன். ஒருவர் மிக வேகமாக ஓடி வேகமாக ரன்களை எடுக்கும்போது அது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார்.
இதன்மூலம், விராட் கோலி கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதே இந்திய அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு. அதனை விராட் கோலி கச்சிதமாக செய்கிறார் என்பதே இவர்களின் பதில்கள் தெரிவிக்கின்றன.