விரைவில் வருமான வரி தாக்கலுக்கு புதிய இணையதளம்; ஜுன் 1-6 வரை இணையதளம் செயல்படாது
மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம், ஜூன் 7ம் தேதி தேதி செயல்பாட்டுக்கு வருகிறது. மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தற்போது www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.
தங்களது தனிநபர் வருமான வரி கணக்குகள் வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகள் இதில் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும், ரீபண்ட் பெறுதல், மேல்முறையீடு, அபராதம், மதிப்பீடு போன்றவை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கவும் இந்த இணையதளமே பயன்பாட்டில் உள்ளது
இந்தநிலையில், இதற்கு பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணைய தளத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது. இது வரும் ஜூன் மாதம் 7ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது. இது, தற்போதைய இணையதளத்தை எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
புதிய இணையதளத்துக்கு மாறுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில், தற்போது உள்ள இணையதளம் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்காது.
புதிய இணையதளம் குறித்து நன்றாக அறிந்து கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், வரி தாக்கல் பணிகளை ஜூன் 10ம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.