ITR refund: அதிகமாக கட்டிய வருமான வரி இன்னும் வரவில்லையா? `இந்த’ வேலை செய்தாயிற்றா?

Tue, 18 Jul 2023-2:26 pm,
income tax department

கடந்த நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Income Tax issues

இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் ஐடிஆர் தாக்கல் செய்துக் கொண்டிருக்கின்றனர்

Income Tax

தனிநபர்கள் 2022-23 நிதியாண்டின் வருவாய் தொடர்பாக 31 ஜூலை 2023 வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம். அதே சமயம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவிட்டு, பணம் திரும்பக் கிடைக்காததால், பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என, பலர் காத்திருக்கின்றனர்

ஏற்கனவே தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ள பல வரி செலுத்துவோர், வருமான வரித்துறையிடமிருந்து தங்களின் பணத்தை (ஏதேனும் இருந்தால்) எப்போது திரும்பப் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் வருமான வரித்துறையிடம் சிலர் இந்தக் கேள்வியைக் கேட்டு வருகின்றனர்

தற்போதைக்கு, வரி செலுத்துவோர் எப்போது பணத்தைத் திரும்பப் பெறுவோம் என்று கவலைப்படுவதற்கு பதிலாக, தவறுகள் ஏது இல்லாமல், வருமான வரிக் கணக்கை விரைவில் தாக்கல் செய்ய முயற்சிக்க வேண்டும்

நீங்கள் எப்போது பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு 10 முதல் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். 

எவ்வாறாயினும், முன்கூட்டியே ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் தங்கள் ரிட்டன்களை சரியாகத் தாக்கல் செய்திருந்தால், அவர்கள் விரைவில் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்

நிலுவைத் தேதிக்கு முந்தைய சில நாட்களில் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, உங்கள் பணத்தை விரைவாகத் திரும்பப் பெற விரும்பினால், விரைவில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது நல்லது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link