அள்ளித் தருவார் சுக்கிரன்... 2025 புத்தாண்டில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் டிசம்பர் 28ம் தேதி இரவு 11:28 மணிக்கு கும்ப ராசிக்கு மாறுகிறார். மேஷம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கும்ப ராசியில் சஞ்சரிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் 2025 புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களின் பொற்காலம் தொடங்கும். கும்ப ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: கும்ப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நன்மை பயக்கும்.உங்கள் வருமானம் கூடும் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளும் கிடைக்கலாம். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மக்கள் உங்களிடம் ஈர்க்கப்படுவார்கள். புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். உங்கள் வசீகரம் மக்களை ஈர்க்கும். காதல் உறவுகள் வலுப்பெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மிதுனம்: சுக்கிரனின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்கள் தந்தை, குரு, வழிகாட்டி ஆகியோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆடம்பரங்களில் முதலீடு செய்வீர்கள். மிதுன ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது வீடு வாங்கவும் திட்டமிடலாம். இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தகவல் தொடர்புத் திறனும் மேம்படும்.
சிம்மம்: சுக்கிரன் பெயர்ச்சியினால், சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம். அவர்கள் காதலில் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில் பங்குதாரர்கள் அல்லது முதலீட்டாளர்கள் கிடைக்கலாம். புதிய முதலீடு மூலம் அதிக லாபம் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு இந்த நேரம் காதல் நிறைந்ததாக இருக்கும். மனைவியுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சுக்கிரனின் அம்சம் உங்கள் ஆளுமையை மேம்படுத்தும். தனிமையில் இருப்பவர்கள் வாழ்க்கைத் துணையைக் காணலாம்.
விருச்சிகம்: கும்ப ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் தரும். சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கத்தால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீட்டில் பொலிவு ஏற்படும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வீட்டை புதுப்பிப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம். வெளிநாட்டில் குடியேறிய உறவினர்கள் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்: கும்ப ராசியில் சுக்கிரனின் பிரவேசம் பலரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும். கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதோடு சில முக்கியமான பாடங்களையும் கற்றுக்கொள்வார்கள். சுக்கிரனின் தாக்கத்தால், தங்கள் ஆரோக்கியம் மற்றும் அழகில் கவனம் செலுத்துவார்கள். இது அவர்களின் ஆளுமையை மேம்படுத்தும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும்.
சனி சுக்கிரன் சேர்க்கை: 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28 ஆம் தேதி, சுக்கிரன் ஏற்கனவே சனி அமைந்துள்ள கும்பத்தில் பெயர்ச்சியாகும் போது, கும்ப ராசியில் சனி சுக்கிரன் இணைவு உருவாகும். இந்த அற்புதமான சேர்க்கை காரணமாகவும் 2025 புத்தாண்டு அதிர்ஷ்ட பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.