கார்த்திகையில் புத-ஆதித்ய யோகம்... இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசிகளை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகின்றன, அதனால், சில கிரக சேர்க்கைகளும் ஏற்படுகின்றன. ராசிகளை மாற்றுவதன் மூலம், அவை ஏற்கனவே இருக்கும் கிரகங்களுடன் இணைவதால் சில ராஜயோகங்கள் உருவாக்குகின்றன.
புதன் பெயர்ச்சி: கடந்த அக்டோபர் 29 அன்று, புதன் விருச்சிக ராசியில் நுழைந்த நிலையில், இப்போது நவம்பர் 16ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியனும் இந்த ராசிக்குள் நுழைகிறார். சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இதனால் உருவாகும் புத ஆதித்ய ராஜயோகத்தினால், 4 ராசிகள் பல வெற்றிகளைப் பெறுவார்கள், மேலும் நிதி ஆதாயமும் கிடைக்கும்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, நவம்பர் 16 ஆம் தேதி காலை 7:16 மணிக்கு கார்த்தை மாத பிறப்பில், அதாவது, நவம்பர் 16ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் போது, அங்கு ஏற்கனவே இருக்கும் புதன் கிரகத்துடன் இணைவார். இதனால், செல்வ வளத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன் சம்பளமும் கூடும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் செய்பவர்கள் பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம், இது நல்ல லாபத்திற்கும் வழிவகுக்கும். நிதி நிலைமை மேம்படும் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புத பகவானும் சூரிய பகவானும் வெற்றிகளை அள்ளிக் கொடுப்பார்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
புதன் மற்றும் சூரியன் இணைவது மகர ராசிகளுக்கு நன்மை பயக்கும். முதலீடுகளில் நல்ல வருமானத்தைப் பெறலாம். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம், அது உங்கள் மனதில் மகிழ்ச்சியைத் தரும். உணவில் கவனம் தேவை, அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சூரியன் இணைவது சுப பலன்களைக் கொடுக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். தொழிலில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும். நோய் தொந்தரவுகள் நீங்கி உடல் நலம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.